வத்தி வைத்தே பிழைப்பை ஓட்டுவதால் வத்திக்குச்சு வனிதா ! பட்ட பேர் வைத்து வம்பிழுக்கும் தர்ஷன்!

பிக் பாஸ் வீட்டின் 53 ஆவது நாள் நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பானது , மந்த மாக போன நிகழ்ச்சி சூடிபிடித்து தற்போது அனல் பறக்க அதகளமாவது வனிதா ரீ எண்டிரியை அடுத்து தான்.


ஏற்கனவே வீட்டில் இருக்கும்போது எல்லா பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்க கூடிய வனிதா, சில காரணங்களுக்காக வெளியேறினார், லைட்டாக சமரசமான வீட்டில் மீண்டும் மாஸ் பேக் டூ பார்ம்க்கு வந்துள்ளார்.

இந்த நிலையில், வந்த உடனே சாந்தமாக இருந்த வனிதா ஆயிரம் வாலா பட்டாசு போல அனைவர் காதும் வெடித்து தள்ள, முகைன் அபி பிரச்சனையை தூசி தட்டி எடுத்து பஞ்சாயத்து என துவங்கி,

தற்போது அடுத்த ஆபரேஷனாக தர்ஷன் - செரின் மீது பாய தயாராகி வரும் வனிதா, முடிந்த அளவில் நேரடியாக மோதாமல் சின்ன சின்ன பார்முலாக்களை அணுகுகிறார்.

மேலும், நேற்றைய நிகழ்ச்சியில் கூட, வழக்கம் போல அமைதி ஆக இருப்பது போல இருந்து விட்டு மீண்டுமாக, அவருக்கு எதிராக  நிற்க்கும்  சண்டைக்கான வாய்புகள் கிடைக்காமல் போக,

தானாக ஒரு டாப்பிக் உடன் பிக் பாஸ் வீட்டிற்க்குள்ளாக வலம் வருகிறார், இந்த நிலையில் தான் அவருக்கான பட்டபெயராக தர்ஷன் வத்திக் குச்சி எனப் பெயர் வைக்க அதை லாஸ்லியாவும் நக்கல் அடித்து சிரிக்கும் காட்சிகள் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது