தர்ஷனும் - செரினும் மாலை மாற்றிக்கொள்ளணும் ! கல்யாண மாலை ஆன கமல் ஷோ!

நடிகை செரின் பிக் பாஸ் வீட்டிற்க்குள்ளாக அதிகம் அன்பாக பழக கூடிய நபர், யாருக்கு எந்த உதவி தேவைபட்டாலும் முதல் நபராக முன்னாள் வந்து நிற்க்க கூடிய குணம் கொண்டவர்.


தர்ஷன் எல்லா போட்டிகளிலும் சிறப்பாக விளையாட கூடிய திறமை சாலி கடின உழைப்பாளி கூட, இந்த நிலையில் இருவருக்கும் இடையே ஆன ரொமான்ஸ் மிக நேர்த்தியாக அளவு தாண்டாமல்,

மற்றவர்கள் ரசிக்க கூடிய அளவில் தான் இருக்கும் , யாருக்கும் பிடித்தமான அந்த ஜோடிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதை கணித்த கஸ்தூரி,

நேற்றைய நிகழ்ச்சியில் அவருக்கான ஹீரோ , வில்லன் மற்றும் ஜீரோ நபருக்கான வர்களை தேர்ந்தெடுக்கம் படி கமல் கேட்க சுதாரித்து கொண்ட கஸ்தூரி சாதுர்யமாக தர்ஷன் மற்றும் செரின் இருவரும் தனக்கான ஹீரோ நபர்கள் என கூற,

அவர்கள் இருவரும் மாலை மாற்றிக்கொள்ள வேண்டும் , நல்ல ஜோடியும் கூட அது தான் என் ஆசை என முதல் காயை கச்சிதமாக நகர்த்தி ஆட்டத்தை துவங்கியவர்,

வில்லன் மற்றும் ஜீரோ சாண்டி, கவின் என சொல்ல  உங்களுக்கான ஹீரோ யாருன்னு சொல்லவே இல்லைன்னு கேட்ட கமலை கோர்த்துவிட, நீங்க தான் சார்ன்னு சாதுர்யமாக விளையாட துவங்கியுள்ளார், நடிகை கஸ்தூரி