பிக்பாஸ் வீட்டில் இருந்து திடீரென துரத்தப்பட்ட சரவணன்! அதிர வைக்கும் காரணம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில், வீட்டில் உள்ள ஒவ்வொரு நபரும் அவர்களுக்கான எவிக்‌ஷன் நாமினேஷனில் இருந்து தான் வெளியேற்றம் செய்யபடுவார்கள் என்பது அனைவரும் அறிந்தது தான்,


இந்த வாரம் எப்போதும் போல எவிக்‌ஷன் நடந்து முடிந்த பின்னதாக சரவணன் தனியாக கண்பஷன் அழைக்கபட்டு, சென்ற வாரங்களில் மீரா -  சேரன் பிரச்சனை நடந்தது அனைவரும் அறிந்தது .

இந்த நிலையில் அந்த நேரத்தில் கமல்ஹாசன், கமல் மீராவிடம் பேசும் போது வேண்டும்.என்றே பெண்களை சீண்டுவதற்க்காக யாரும் பேருந்துகளில் பயணிப்பது இல்லை.

அவரவர் அலுவலகம் செல்லும் நினைவில் தான் இருப்பார்கள் என்பதும் அவரது வாதம், இதற்கிடையில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் சித்தப்பு கைத்தூக்கி,

கல்லூரி காலங்களில் தான் இதற்க்காகவே பேருந்துகளில் சென்றிருக்கிறேன் என வாலியண்டராக ஆஜராக , கமலும் அரண்டு போனார்.

இந்த நிலையில் சரவணன் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பி ஆங்காங்கே பூதாகரமானதை அடுத்து, அதற்க்கு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதை அடுத்து பிரச்சனை சால்வானதாக பார்க்கபட்டது.

இதற்கிடையில் நேற்று எவிக்‌ஷன் முடிந்த நிலையில் வீட்டில் யாருக்கும் தெரியாமல், கண்பஷன் ரூமுக்கு அழைத்த பிக் பாஸ்,அதே பிரச்சனையை காரணம் காட்டி சரவணன் வெளியேற வேண்டும் என வற்புறுத்தியது

பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இதற்கிடையில் பிக் பாஸ் சரவணனை பின் பக்க வாயிலாக அனுப்புகிறார், இதனால் அவர் இரகசிய அறைக்கு கொண்டு செல்லபடுகிறாரா? என்ற கேள்வியும் எழுகிறது.