நாங்க இதானே நினைச்சோம்! இப்படி பண்ணிட்டாரே ? அழுது புரண்ட ஹவுஸ் மேட்ஸ்

சரவணன் ஒரு கால கடத்தில் பீக்கில் இருந்த கதா நாயகன் தான் , பார்ப்பதற்கு நடிகர் விஜயகாந்த் போல இருப்பார், பல இடங்களில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


பிக் பாஸ் போட்டியாளராக அவர் வந்த போது பெரிதாக, யாருக்கும் நெருக்கமாக இல்லை என்றாலும் கூட , போகிற போக்கில் சாண்டி, கவின் உடன் அதிக நெருக்கமாக இருந்தவர் சரவணன்.

இதற்கிடையில் மற்றவர்களுடன் செட்டாகாத மீராவும் சரவணன் உடன் அதிகம் நெருங்கி பழகியவர் , இணக்கமாக இருந்தவர் என்பதை யாரும் மறுக்க இயலாது.

இந்த நிலையில், அவர் சேரன் மீரா பிரச்சனையின் போது கமல் மத்தியஸ்தம் செய்துகொண்டிருந்த வேளையில் பேருந்தில் பெண்களை இடிப்பதற்காகவே செல்வேன் என நேர்மையாக ஒப்புக்கொண்டார்.

நாட்கள் நீள பிரச்சனையும் நீண்டதை அடுத்து பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டிருந்தார் சரவணன், எல்லாவற்றையும் தாண்டி நேற்று எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் சரவணன் வெளியேற்றப் பட்டது சக போட்டியாளர்களை உடைந்து அழ செய்தது.

அவருடன் கூடவே சுற்றி வந்த கவின் , சாண்டி ஒரு கட்டத்தில் அடக்க முடியாமல் அழுது புலம்பி தள்ளினார்கள், அவரை இனி யாரும்.நாமினேட் செய்யாமல் பார்த்துக்கொள்வோம் என முடிவு செய்திருந்தோம்,

அவருக்கான நாமினேஷன் வராமல் சென்ற டாஸ்க்கில் கூட நாங்கள் சேகரித்த பணத்தை அவருக்கே கொடுத்து சேப் சோனுக்குள் வைக்க நினைத்தோம் என இருவரும் உடைந்த குரலில் பேசியது சக போட்டியாளர்கள் மட்டும் அல்ல , ரசிகர்களையும் நெகிழ செய்துள்ளது.