கமல் குறித்து சொன்ன ஒரே ஒரு வார்த்தை! சரவணன் பிக்பாஸ் வீட்டில் இருந்து துரத்தப்பட்டதன் உண்மை பின்னணி!

சரவணன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதற்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.


யாரும் எதிர்பாராத வகையில் திடீரென இரவோடு இரவாக சரவணன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த தகவலை பிக்பாஸ் நிகழ்ச்சியை தயாரித்து வெளியிடும் எண்டமோல் நிறுவனமே வழியச் சென்று முன்னணி ஊடகங்களுக்கு கூறியது.

பெண்களை பேருந்துகளில் உரசவே பேருந்தில் செல்வதாக இரண்டு வாரங்களுக்கு முன்னர் சரவணன் கூறியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனை அடுத்து சரவணன் மன்னிப்பு கூட கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் அதே பெண்கள் விவகாரத்தை மையமாக வைத்து சரவணனை பிக்பாஸ் வெளியேற்றிவிட்டதாக கூறுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல என்று சொல்லப்படுகிறது. சரவணன் யாரையும் மதிக்காமல் ஒருமையில் பேசிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் சேரனை அவ்வாறு பேசி சரவணன் சர்ச்சையில் சிக்கினார். ஆனாலும் கூட தனது குணத்தை அவர் மாற்றிக் கொள்ளவில்லை என்கிறார்கள். நேற்று சரவணன் கமலை ஒருமையில் பேசியதாகவும், கமல் என்ன பெரிய இவனா? என்கிற ரீதியில் கவின் மற்றும் தர்சனிடம் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்தே பிரச்சனை பெரிதாகிவிடக்கூடாது என்று சரவணனை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து துரத்தியுள்ளனர் என்று கூறுகிறார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பாக ஒரு ஒப்பந்தத்தில் சரவணன் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி வெளியேற்றத்திற்கான காரணத்தை அவரால் வெளிப்படையாக கூற முடியாது. எனவே விஜய் டிவி கூறினால் தான் உண்டு.