நீ கவினை கட்டி பிடிச்சியா ? சண்டைக்கு வந்த சாக்‌ஷி

பிக் பாஸ் வீட்டில் நுழைந்த நாளில் இருந்து அபியுடன் கவின் இணக்கமாக இருந்த போதில் இருந்தே சாக்க்ஷி கவினை அபேஸ் பண்ண திட்டமிட்டது அனைவரும் அறிந்த ஒன்று தான்.


அதிலும் கடந்த சில வாரங்களாக சூடு பிடித்த அவர்களது சண்டை பொது மேடையில் கமல் முன்னிலையில் பஞ்சாயத்து செய்யும் வரை சென்றிருக்கிறது, இதற்கிடையில்

தொடர்ந்து இவர்கள் மன நிலைலக்காக மற்றவர்கள் இவர்களை மறைமுகமாக நாமினேட் செய்வதாக தெரிவித்தாலும் கூட உள்ளூர அவர்கள் இணைந்திருப்பது மற்றவர்களுக்கு ஒரு வித நெருடலை தருகிறதா என்ற கேள்வி எழுகிறது.

இதனை உறுதி படுத்தும் வகையில், சாக்சியை சத்தமிட்டதற்க்காக ரேஷ்மா கவினை நாமினேட் செய்து இருந்தார், ஆனால் அதன் முன்னதாக அவர் பல முறை இவர் பெயரை நாமினேட் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது

மேலும் கவினிடம் பிறகு போய் என் மகனுக்கு பீஸ் கட்டுடான்னு தோளில் சாய்ந்தபடி, இருக்க கட்டி பிடித்து நிற்க, இதை பார்த்து காண்டான சாக்‌ஷி, ரேஷ்மா விடம் நேரடியாக இது பற்றி கேட்க,

சமாளித்து மழுப்பிய ரேஷ்மா, பெண்களை சத்தமிடுவதை மற்றவர்களும் செய்ய கூடாது என விழிப்பு உணர்வு கொண்டு வரதான் அவர்களை நாமினேட் செய்தேன், என கூற அப்ப, உங்க எல்லாருக்கும் நானும-் கவினும்  பேசி சுத்துறப்போ பிடிக்கல,

இப்போ நாங்க பிரிஞ்சிருக்கபோ எல்லாரும் ஒன்னு சேர்ந்துக்குறீங்க என்ன நடக்குதுன்னு சாக்‌ஷி கேட்டு புலம்பும் காட்சிகள் நேற்றைய நிகழ்ச்சியை அழுகாட்சியாக வைத்திருந்தது.