போடு தகிட ! தகிட ! அடிச்சு நவுத்திய ஹவுஸ் மேட்ஸ் - சிம்பு, சரோஜாதேவி எண்ட்ரி ?

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான இந்த வார லக்சுரி பட்ஜெட்டாக கொடுக்கபட்ட டாஸ்க்கு, போடு ஆட்டம் போடு ! இதன் படி வீட்டில் உள்ள ஒவ்வொரு ஹவுஸ் மேட்சுக்கும் ஒரு சினிமா கதாபாத்திரம் வழங்கபட,


போட்டியாளர்கள் அந்த ஹவுஸ் மேட்சாகவே மாறி நடிக்க வேண்டும் குறிப்பாக , அந்த கதாப்பாத்திரம் போன்ற உடையையும் அணிந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட கண்டிஷன்கள் போடப்பட,

லாஸ்க்கு 96 ஜானு, சாண்டிக்கு சிம்பு, சாக்‌ஷிக்கு சரோஜா தேவி என கொடுத்த பிக் பாஸ், சித்தப்பு ஆப்டாக கொடுத்த கெட்டப் தான் சின்னகவுண்டர்

ஏற்கனவே போன வாரத்தின் டாஸ்கின் போது சித்தப்புக்கு கொடுத்த மைனர் வேடம் மிக கச்சிதமாக பொறுந்தியதுடன் அந்த கதாபாத்திரத்திற்க்கான எல்லா சர்ச்சையை சந்தித்தார்,

இதனை அடுத்து இந்த வார டாஸ்க்கில் அவருக்கு சின்னகவுண்டர் கெட்டப் இன்னும் என்ன ஆக போதோ என்ற பதட்டம் அவரையுமே பிடித்துள்ளது, 

இதற்கிடையில் சென்ற வார லக்சுரி பட்ஜெட்டில் நூறு மதிப்பெண் அதிகமாக பொருளை பட்டியலில் சேர்த்ததினால் மொத்த பாயிண்ட்சையும் இழந்த நிலையில் இந்த வாரம் போட்டியாளர்கள் சீராக விளையாடுவார்கள் எனவும் எதிர்ப்பார்க்கபடுகிறது.