பழைய சோறு தான் வேணும்! அடம் பிடிக்கும் மது! ரேஷ்மாவிடம் சிக்கிய மோகன் வைத்யா! பிக்பாஸ் வீட்டில் லக லக!

ஆரம்பத்தில் இருந்தே பிக் பாஸ் வீட்டில் எதிரும் புதிருமாக சர்ச்சையை கிளப்பக்கூடிய, நபர்களில் மது மிக பிரபலமானவர்.


யாருக்காக வலை விரித்தாலும் தானாக முன்னாடி சென்று சிக்கி திக்கு முக்காடுவார், ஆனாலும் கூட அசராமல் சிங்கிள் ஆக அடித்து அடக்கியவர் மது. இதற்க்கிடையில், சாப்பிட உட்கார்ந்த மதுவுக்கு ஓட்ஸ் பிடிக்காதாம், ரேஷ்மாவிடம் எனக்கு பிடிக்கலை, பழைய சாதம் குடுங்கன்னு கேட்க காண்டான ரேஷ்மா யாருக்கு என்ன வேணும் நாலும் அவங்களே போய் பார்த்துகங்கன்னு சொல்ல ,

கடுப்பான ஜாங்கிரி கேப்டன், கேப்டனிடன் போய் சொல்ல அவரும் இசைகிறார்.எது என்ன ஆனாலும் எனக்கு நேத்து வைச்ச சாததுக்கு தண்ணீர் வச்சி கொடுத்தாலும் போதும் என்று மன்றாடுகிறார். ஆரம்பம் துவங்கி தன்னை தனித்துவமாக காண்பித்துக் கொள்வதில் மது மும்மரமாக செயல்பட்டு வருகிறார்.

ரேஷ்மா சமையல் பிடிக்காமல் பழைய சாதத்தை கூட சாப்பிட மது தயாராக இருந்தாலும் இந்த விவகாரத்தில் மோகன் வைத்தியா தான் தேவையில்லாமல் மதுவுக்காக பேசி ரேஷ்மாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார். தனது வயதுக்கு இது எல்லாம் தேவையா என்று வேறு அவர் வருத்தப்பட்டுக் கொண்டார்.