பிக்பாஸ் வீட்டில் பெண்களை ஆண்கள் பயன்படுத்துறாங்க! திருவாய் மலர்ந்த மதுமிதா! லாஸ்லியா கேட்ட ஒரே கேள்வி! பிறகு ஏற்பட்ட களேபரம்!

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாகவே, ஆண் / பெண் என பேதத்தின் அடிப்படையில் வாக்குவாதங்கள் முடியாத தொடர்கதையாக இருக்கிறது.


முதல் நாளில் வனிதா துவங்கிய கேள்வி ஆண்கள் வீட்டில் உள்ள பெண்களை பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பது , உண்மையில் இந்த கேள்விக்கு காரணம், அபி, செரின், சாக்‌ஷி என தொடர்ந்த வரும் காதல் கதைகளும் அதனால் உண்டாகும் பெரும் பஞ்சாயத்துகளும் தான் என்றாலும் கூட, மது அந்த வார்த்தையை விடாமல் பிடித்துக்கொண்டு குட்டிகரணம் அடிக்கிறார்.

அதிலும், மதுவுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாமல் அபிக்காக மது பிடித்த உரிமை போர் கொடி, திசை மாறி கவினை குறிவைக்க வனிதா. அப்போதே இந்த வார்த்தையை தேவையில்லாமல் பயன்படுத்த வேண்டாம் என சொல்லியிருப்பார்.

இந்த நிலையில், இன்றைய பிரமோவில் வீட்டில் உள்ள ஆண் போட்டியாளர்கள் பெண்களை யூஸ் பண்ணுவதாக மறுபடியும் மது குரலை உசத்தி சண்டை பிடிக்க, கடுப்பான பசங்க பதில் கொடுக்கும் முன்னதாக, முந்திக்கொண்ட லாஸ்லியா,

இதுவரைக்கும் சும்மா தானே இருந்தீங்க மது, இப்போ மட்டும் என்ன வனிதா அக்கா சொன்னவுடன் அதையே பிடிச்சுக்கிட்டீங்க ? இவ்ளோ நாளா எங்க வேற்று கிரகத்துலயா இருந்தீங்கண்னு கேள்வி கேட்க, பதில் சொல்ல முடியாமல் மது வாயடைத்து நிற்க்கிறார், அதே நேரத்தில் ஏற்கனவே பல முறை ஆண்கள் பெண்களுக்கு எதிராக செயல்படுவதாக கருத்துக்களை மதுமிதா முன் வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.