பிக்பாஸ் கவினை விட அவர் அம்மா பெரிய தில்லாலங்கடியாம்! ஆதாரத்துடன் வெளியானது அதிர்ச்சி தகவல்!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த வழக்கில் பிரபல தனியார் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின் என்பவரின் தாய்க்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


திருச்சி கே.கே.நகரை சேர்ந்த தமயந்தி, மகள் ராஜலட்சுமி, மருமகள் ராணி, அருணகிரி, சொர்ணராஜன் ஆகியோர் அனுமதியின்றி 1998 முதல் 2006 -ம் ஆண்டு வரை ஏலச் சீட்டு கம்பெனி நடத்தி வந்தனர்.

இவர்கள் நடத்தி வந்த சீட்டு கம்பெனியில் ஏழை எளிய மக்கள் வீட்டு செலவுகளை மிச்சம் பிடித்து கிட்டதட்ட 32 லட்சம் ரூபாய் செலுத்தி இருந்தனர். ஆனால் ஏலச்சீட்டு ஏலம் முடிந்து பணத்தை திருப்பி தரவில்லை என 2007 -ம் ஆண்டு திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.

வழக்கு விசாரணை திருச்சி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சொர்ணராஜன் மற்றும் அருணகிரி ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டனர். ஏலச்சீட்டு நடத்தி மோசடி நிரூபிக்கப்பட்டதால் தமயந்தி, ராணி மற்றும் ராஜலட்சுமி ஆகியோருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் தலா 2 ஆயிரம் ரூபாயும் தண்டனை விதித்து திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

ஏலச்சீட்டால் பாதிக்கப்பட்ட முதலுட்டாளர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கவேண்டும் எனவும் திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினின் தாயார் ராஜலட்சுமி, மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது முதலே அதில் போட்டியாளர்களா இருப்பவர்களுக்கு ஏதேனும் ஒரு சிக்கல் வந்து கொண்டே இருக்கிறது. பண மோசடி புகாரில் சிக்கிய மீரா மிதுன் தொழிலதிபரை மிரட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வனிதா விஜயகுமாரின் மீது குழந்தை கடத்தல் புகார் அளிக்கப்பட்டதால் அவரை விசாரிக்க போலீசார் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர். 

அந்த வரிசையில் தற்போது பிக்பாஸ் போட்டியாளர் கவினின் தாயார் ராஜலட்சுமி, தமயந்தி, ராணி ஆகியோர் என குடும்பமே சிறைக்கு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.