பிக் பாஸ் பைனல் நிகழ்ச்சியில் பங்கேற்காத நிலையில் தான் கலந்து கொண்டது போல் காட்சிகள் அமைத்திருப்பதாக மதுமிதாவின் கணவர் மோசஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து விஜய் டிவி நிர்வாகம் விளக்கம் தரவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார் மோசஸ்.
நான் நிகழ்ச்சிக்கே போகலை! ஆனால்..! பிக்பாஸ் 3ல் நடைபெற்ற ஏமாற்று வேலை! மதுமிதா கணவர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பான ஆரம்ப நாள் முதலே பல சர்ச்சைகள் அரங்கேறியது. சக போட்டியாளர்கள் தந்த டார்ச்சரால் வெளியேறியதாக கூறிய மதுமிதா தற்கொலைக்கு முயன்றது போல் நாடகம் ஆடி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் மதுமிதா பொய் சொல்வதாக விஜய் டிவி நிர்வாகம் அவர் மீது புகார் அளித்தது.
ஆனால் தன் மீது பொய் புகார் அளிப்பதாக விஜய்டிவி நிர்வாகம், கமல்ஹாசன் மீதும் புகார் அளித்திருந்தார் மதுமிதா. இவற்றை எல்லாம் கடந்து ஒருவழியாக கடந்த ஞாயிறன்று நிகழ்ச்சி நிறைவு பெற்றது. ஆனால் நிகழ்ச்சி முடிந்தும் சர்ச்சை தொடர்ந்து வருகிறது.
பிக்பாஸ் பினாலே நிகழ்ச்சியில் மதுமிதாவுக்கோ, அவரது குடும்பத்தாருக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால் அந்த நிகழ்ச்சியில் மதுமிதாவின் கணவர் மோசஸ் பங்கேற்ற காட்சி காண்பிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக மதுமிதாவின் கணவர் மோசஸ், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிக்பாஸ் ஃபைனலில் தானோ மதுமிதாவோ பங்கேற்கவில்லை. ஏன் என்றால் அவர்கள் எங்களை அழைக்கவில்லை.
ஆனால் அதில் நான் பங்கேற்றது போல் ஒரு செய்தி வெளியில் பரவி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்காதது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர்கள் ஏன் அப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை. இதுகுறித்து அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என மோசஸ் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.