கமல் முன்பு பட்டாசாக வெடித்த தர்ஷன்! அரங்கையே அதிர வைத்த ரசிகர்கள்! வனிதா முகம் போனத பார்க்கணுமே..!

பிக் பாஸ் வீட்டின் 20 ஆவது நாளில் கமல் ஹவுஸ் மேட்ஸ் அனைவரையும் காண்பது வழக்கம், அதில் முதல் பிரமோவில் கமல் தலைமை பண்பு பற்றி அழுத்தமாக பேசியிருப்பார்.


அதிலும் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள், சுயமாக சிந்தித்து செயல்பட வேண்டும், துணிச்சலோடு செயல்பட வேண்டும் என அவர் கூறுவதுமாக வெளியானது அந்த வார கேப்டனாக இருந்தவர் அபிராமி தான் என்பதால் அதில் அவரை தான் சொல்கிறார் என புரிதல் இருந்தது.

இதற்கிடையில், வெளியான இரண்டாவது பிரமோவில் வனிதா  அபிராமி தனக்கான லைம் லைட்டிற்க்காகவும் , தன்னை பிரமோட் செய்துக் கொள்ளவும் தான் இப்படி நடந்துகொள்கிறார ? அவரது குணமே இது தானா ? அல்லது அவர் தேவைக்கு ஏற்றது போல நடிக்கிறார என்ற கேள்விகளை வனிதா எழுப்ப

மற்றொரு பக்கம் கமல் ஏன் வீட்டில் ஒருவர் குரல் தான் ஓங்கி ஒலிக்க வேண்டுமா? ஒருவரை தான் முழுவதுமாக போகஸ் பண்ண வேண்டுமா என எழுப்பிய கேள்விகள் வனிதாவின் முகத்தை சுருங்க செய்தது

மேலும் கமல் வனிதா நடவடிக்கை பற்றி லாஸ்லியாவிடம் கேட்க தர்ஷன் மன்னிப்பு கேட்க அவசியம் இல்லை என சொல்ல, தர்ஷன் தனது பக்கம் இருந்த நியாயத்தை விளக்கமாக எடுத்து கூற,

பார்வையாளர்கள் அரங்கம் அதிர லாஸ்லியாவையும், தர்ஷனையும் ஆமோதித்து கொடுத்த கரகோஷம், மற்றவர்களை உற்சாக படுத்தினாலும், வனிதாவுக்கு எதிரான சூழ்நிலையை அவருக்கு தெளிவாக எடுத்து உரைத்துள்ளது எனலாம்.

கமலின் இந்த செய்கை ஒருபக்கம் பிள்ளையை கிள்ளி விட்டு மற்றொரு பக்கம் தொட்டிலை ஆட்டி வைக்கும் பழமொழி போல அமைந்தது .