செரினின் இந்த நிலைக்கு இது தான் காரணமா ! கலங்கிய ஹவுஸ் மேட்ஸ்

பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் அதிகமாக பேசாத அதே அளவில் மற்றவர்களுடன் மிக அதிக அன்புடனும் அக்கறையுடன் பழக கூடிய நபர் தான் செரின்.


இவர் துள்ளல் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக  நடித்தவர் , பார்க்க மட்டும் அல்ல பழகவும்  அவ்வளவு எளிமையான அழகான நபர் கூட, செரின்.

நட்பிற்க்காக எப்போதும் சார்ந்து நிற்க்கும் செரின், வீட்டின் அத்துனை நபர்களையும் பாசத்தோடு நடத்தும் வழக்கம் கொண்டவரும் கூட , மோகன் வைத்தியா உட்பட பலர் இதை சொல்லி இருக்கின்றனர்.

ஆரம்பத்தில் பல பிரச்சனையில் தலையிட்டு வந்த செரின் ஒரு கட்டத்தில் மொத்தமாக அமைதியாகி மற்றவர் பக்கமும் கூர்ந்து கவனிக்க துவங்கியுள்ளார்.

ஒருபக்கம் சரியாக முன்னேறி வரும் செரின் , மற்றொரு பக்கம் அசத்தி ஆடி முன்னேறி வரும் தர்ஷன் சக போட்டியாளர்களுக்கு டப் கொடுக்கும் போட்டியாளர் தான்,

இருந்தாலும் இருவருக்கும் இடையான ரொமேன்ஸ் காட்சிகள் மற்றவர்கள் முகம் சுளிக்கும் அளவில் அல்லாமல் ரசிக்கும் வகையில் தான் உள்ளது எனலாம், இதற்கிடையில் நேற்றைய டாஸ்க்கில்,

செரின் தனது குடும்பம் பற்றி கூறினார், அவருக்கான எல்லாமும் இருந்த அவர் அம்மாவின் தியாகம் பற்றி செரின் பேசிய போது சக போட்டியாளர்களும் உணர்ச்சி வசப்பட்டனர்,

அவரது ஆழ்ந்த , மெச்சுரான நடவடிக்கை எப்படி வந்துள்ளது என்பதை கமலும் கேட்டிருப்பார், அதற்க்கான விடைதான் செரின் கொடுத்துள்ளார்.