டிவி நடிகரை 2வதாக திருமணம் முடித்த பிக்பாஸ் பிரபலம்! வைரல் புகைப்படம்!

பிக்பாஸ் பிரபலம் ரம்யா தற்போது சின்னத்திரை நடிகரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் இவர்களின் திருமண புகைப்படமானது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.


தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் பாடகியாக ஜொலித்தவர் ரம்யா. தற்போது கடந்த சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றவர். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'பந்தயம்' திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் இவருக்கு திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். முறையாக இருவரும் டைவர்ஸ் அப்ளை செய்து நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சின்னத்திரை நடிகர்கரான சத்யா என்பவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். 

இந்நிலையில் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த திருமண நிகழ்ச்சியில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரங்கள் அவர்களின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றுள்ளனர்.