தந்தையின் நினைவை என்றும் போற்றும் வகையில் அவருக்காக சிலை ஒன்றை நிறுவியுள்ளார் நடிகரும், பிக்பாஸ் போட்டியாளருமான சரவணன்.

தந்தையின் நினைவை என்றும் போற்றும் வகையில் அவருக்காக சிலை ஒன்றை நிறுவியுள்ளார் நடிகரும், பிக்பாஸ் போட்டியாளருமான சரவணன்.


சேலம் மாவட்டம் வட்டக்காடு கிராமத்தில் விநாயகர் மற்றும் வீரமுனி கடவுள்களுக்காக கோயில் கட்டியுள்ள நடிகர் சரவணன் தன்னுடைய தந்தைக்காகவும் ஒரு சிறிய கோயில் கட்டியுள்ளார். இந்த கோயிலின் கும்பாபிஷேகம் அக்டோபர் 30-ம் தேதி நடைபெற உள்ளது. 

இதுகுறித்து சரவணன் தெரிவிக்கையில், தாய், தந்தை வசித்த வீட்டை விற்று வாங்கிய நிலத்தில் அவர்கள் நினைவாக கோவில் கட்டியுள்ளதாகவும், வீரமுனி பீடத்தின் பக்கத்துலேயே தந்தைக்கு சிலை அமைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும அக்டோபர் 30-ம் தேதி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டிருப்பதாகவம், சேலம் மாவட்ட ஆட்சியர், ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவன் ஆகியோருக்கும் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளர்களும் பங்கேற்க உள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் 3வது சீசன் போட்டியாளர்களில் ஒரு சிலரும், 2வது சீசனின் டைட்டில் வின்னர் ரித்விகா, நடிகர் பரணி ஆகியோரும் வருகையை உறுதி செய்திருக்கிறார்கள்.