நடுரோட்டில் பிக்பாஸ் நடிகர் செய்த ரகளை! பிடித்து நையப்புடைத்த இளைஞர்கள்!

கன்னட நடிகரும் பிக்பாஸ் பிரபலமான நடிகர் ஹிச்சா வெங்கட் என்பவர் திடீரென நடு ரோட்டில் நின்று கொண்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்தும், அதன் கதவை பிடித்து இழுத்தும் காரை சேதப்படுத்தியுள்ளார்.


இந்நிலையில் அதை பார்த்த காரின் உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் அவரை தடுத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்நிலையில் இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குனர் பாடகர் மற்றும் பாடலாசிரியர் என பல பரிமாணங்களில் சினிமா துறையில் கலக்கி வருபவர் கண்ணட நடிகர் வெங்கட், இவர் தற்போது குடகு பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு சாலையில் நின்று கொண்டிருந்த காரை உடைக்க முயன்றுள்ளார்.

இந்நிலையில் காரின் கதவை பிடித்து இழுத்தும் காரின் கண்ணாடியை உடைத்துள்ளார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த காரின் உரிமையாளர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அருகிலிருந்த பொதுமக்களும் காரின் உரிமையாளருக்கு ஆதரவாக வெங்கட்டை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெங்கட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். மற்றும் அவர் ஏன் இவ்வாறு நடந்து கொண்டார் என்பது குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.