நீங்க எதுக்கு வந்தீங்க ? ஒன் டூ ஒன் ஆன வனிதா - கஸ்தூரி.

பிக் பாஸ் வீட்டிற்க்குள் லேட்டாக வந்தாலும் பெரும் பில்டப்புடன் வந்தவர் நடிகை கஸ்தூரி அவர் , கடந்த 2 சீசன்களில் கலந்து கொள்வார் என எதிர்ப்பார்க்கபட்ட நிலையில்,


இந்த சீசன் ஆரம்பத்திலும் வரவில்லை, இந்த நிலையில் யாரும் எதிர்ப்பார்க்காமல் பிக்பாஸ் வீட்டிற்க்குள் நுழைய அவர் செய்த யுக்திகளை நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இதற்கிடையில் பெரும் பில்டப்புடன் சென்ற கஸ்தூரி உள்ளே சென்றதும் யாரை எல்லாம் லெப்ட் , ரைட் வாங்குவார் என்ற எதிர்ப்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு மாறாக கடுப்பை ஏற்றியது அவரது பர்பாமான்ஸ்,

இதற்கிடையில் செரின் - தர்ஷனை மாலை மாற்றிக்கொள்ள சொன்னது, முகைன் உடைத்த கட்டிலை பார்ப்பது, இந்த இடம் தாஜ்மகால் என அபி சொல்ல நமட்டு சிரிப்பு செய்தது என, சராசரி ரசிகனுக்கு அவர் மீதான கேள்விகளை,

வனிதா தரப்பில் நேற்று விவாத டாஸ்க்கின் போது முன் வைக்கபட்டது, வந்த நாள் முதலாக கஸ்தூரி டார்கெட் செய்து வந்த சாண்டி மற்றும் கவின் லிஸ்டில் வனிதா சேர,

அவர்களுக்கும்.சேர்த்து மற்ற ஹவுஸ் மேட்சின் டார்கெட்டாக கஸ்தூரி மாறி வருகிறார் எனலாம் அதிலும் அவர் வந்த போது மரியாதையும் , மதிப்பும் நாளடைவில் அவரது செயல்பாடுகளை வைத்து தரம் குறைக்கபடுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது