மகள் மகள் என்று கூறி லாஸ்லியாவுக்காக சேரன் செய்த வேலை! அதிர்ச்சியில் பிக்பாஸ் குடும்பம்!

பிக் பாஸ் வீட்டில் ஒருவருகொருவர் அப்பா, அம்மா உறவு சொல்லி உருகுவது பழக்கபட்டது தான்.


ஆனால் தனது அப்பாவை போல சேரன் உள்ளதாக கூறிய லாஸ்லியாவை மகளாகவே சேரன் பார்ப்பதாக ஆரம்பத்தில் தெரிந்தாலும், அவரது எவிக்‌ஷன் நிலையில் எடுக்கும் நிலைப்பாடு லாஸ்லியா ஆர்மியை கொந்தளிக்க செய்திருக்கிறது.

எவிக்‌ஷனில் சேரன் லாஸ்லியாவை நாமினேட் பண்ணும் போது, ஒரு நிமிஷம் நம்ம பசங்க முகத்துல ஈ ஆடல, அதுவும் மனுஷன் இவைங்க மத்தியில இவள் வேண்டாம் என கண்ணீருடன் பேச, அவரைத் தொடர்ந்து நம்ம சித்தப்பு சரவணனும், பாத்திமா பாபுவும் சேரன் தன்னை இன்னும் டைரக்டராகவே பாவித்து எல்லாவற்றிலும் தலையிடுவதாக கூறி நாமினேஷன் செய்கின்றனர்.

எது எப்படியானாலும், லாஸ்லியா க்காக அன்பினால் சேர்ந்த கூட்டத்தின் மனதை உலுக்கியது இந்த பிரோமோ. மேலும் நிகழ்ச்சியை பார்த்த போது சேரன் லாஸ்லியாவை மட்டும் அல்லாமல் தர்சனையும் நாமினேட் செய்துள்ளார். காரணத்தை அவர் கூறியது தான் அனைவருக்கும் ஆச்சரியம்.

அதாவது குழந்தைகள் போல் இருக்கும் லாஸ்லியாவும், தர்சனும் பிக்பாஸ் வீட்டில் வேண்டாம் என்று முடிவு செய்து நாமினேட் செய்திருப்பதாக சேரன் கூறியதை யாரும் நம்பத் தயாராக இல்லை. மகள் என்று கூறிய பிறகு அந்த வீட்டில் லாஸ்லியாவை பாதுகாக்க வேண்டியது சேரன் கடமை தானே.