சீன அதிபருக்கு பரதநாட்டிய வரவேற்பு! இனிமே நாம சீனப்பட்டாசு வாங்கலாமா, கூடாதா?

சீனாவில் இருந்து தனி விமானத்தில் சென்னைக்கு வந்த சீன அதிபர் ஜின் பிங்கிற்கு சென்னை விமான நிலையத்தில் சிவப்புக்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது.


ஆளுநர் பன்வாரிலால் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு கொடுத்தனர். விமான நிலையத்திலேயே சீன அதிபர் முன்பு பரதநாட்டியமும், கிராமியக் கலைகளும் நிகழ்த்திக் காட்டப்பட்டன. ஆனால், அவரோ தெருவித்தை பாணியில் அதை நின்று பார்க்காமல், டாடா காட்டியபடி கடந்துவிட்டார்.

விமான நிலையத்தில் இருந்து கிளம்பி கிண்டி ஐ.டிசி. கிராண்ட் சோழா ஓட்டலுக்கு வந்துவிட்டார் ஜின்பிங். இப்போது இதிய மக்களுக்கு இருக்கும் சந்தேகம் இனி நாம் சீனப் பொருட்களை வாங்கலாமா கூடாதா என்பதுதான். ஏனென்றால், நீ உண்மையான இந்தியனாக இருந்தால் சீனப் பொருட்களை வாங்காதே, சீனப் பட்டாசுகளை வங்காதே என்று தேச பக்தியெல்லாம் போதித்தது பா.ஜ.க.தான். 

ஆனால், இப்போது சீனாவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்திருப்பதைப் பார்த்தால், சீன பட்டாசுக்கும் அப்படித்தானே வரவேற்பு கொடுக்க வேண்டும். சீக்கிரம் மோடிகிட்டே கேட்டுச் சொல்லுங்கப்பா.