ரயில் மீது ஏறிய இளைஞர்! பிறகு நிகழ்ந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்!

பெங்களூருவில் ரயில் மீது ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கியதால் தூக்கி வீசப்பட்டு இறந்த அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.


பெங்களூரு மெஜஸ்டிக் ரயில் நிலையத்தில் அந்த ரயிலை கொண்டு வந்து நிறுத்தும்போது எவரும் எதிர்பார்க்கவில்லை அந்த ரயில் ஒரு உயிர்ப்பலி வாங்கப் போகிறதென்று. நின்று கொண்டிருந்த ரயிலின் மேற்கூரையில் திடீரென ஏறிய ஒரு இளைஞர் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார். 

அருகில் இருந்தவர்கள் கீழே இறங்குமாறு அந்த இளைஞரை பதற்றத்துடன் வலியுறுத்தினார். ஆனால் இறங்கவும் இல்லாமல் அடுத்த கட்ட நடவடிக்கையிலும் ஈடுபடாமல் நின்ற இளைஞர் இறங்கிவிட வாய்ப்பு இருப்பதாக நூலிழை நம்பிக்கையில் காத்திருந்த அவர்களுக்கு திடீர் அதிர்ச்சி

யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென அந்த இளைஞர் உயர் மின்னழுத்த கம்பியில் கையை வைக்க, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்படார். அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பதைபதைப்பை ஏற்படுத்தி வருகிறது. உடல் கருகிய நிலையில் இளைஞரின் உடலை மீட்ட போலீசார் அந்த இளைஞர் யார் என்றும் தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.