நீண்ட ஜடை..! முகமெல்லாம் ரத்தம்..! பெங்களுரை நள்ளிரவில் அலறவிட்ட பேய்கள்..! விரைந்து சென்ற போலீஸ் கண்ட காட்சி!

டிக் டாக் வீடியோ போன்று எதையாவது செய்து பிரபலமாக வேண்டும் என நினைத்த இளைஞர்கள் பேய் வேடமிட்டு நள்ளிரவில் சுற்றித் திரிந்ததால் போலீசார் அவர்களை கைது செய்தனர்.


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று அதிகாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது யஷ்வந்த்பூர் என்ற பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, பேய் போன்ற உடை அணிந்தபடி 7 இளைஞர்கள் உலா வந்தனர். முதலில் அவர்களை பார்த்த காவல்துறையினரே அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.

பின்னர் பேய் வேடமிட்டு சாலையில் உலாவி கொண்டிருந்த 7 இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதனால் பயந்து போன பேய்கள், மன்னிக்கவும் இளைஞர்கள் அங்கு போலீசார் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயன்றனர். ஆனாலும் போலீசார் அவர்களை தப்ப விடாமல் கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்றனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பிரபலம் ஆகவேண்டும் என்பதற்காக பேய் போன்று வேடமிட்டு சாலையில் செல்லும் மக்கள் மத்தியில் வீடியோ எடுத்ததாக தெரிவித்தனர். இளைஞர்கள் பதிவு செய்த வீடியோக்களை ஆய்வு செய்த போலீசார் மக்களை அச்சுறுத்தும் விதத்தில் நடந்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர் செய்தனர்.