ரிலீஸ் ஆகிறதா பாலாவின் வர்மா? எது பெஸ்ட்டுன்னு பார்க்கலாமா?

சமீபத்தில் துருவ் நடிப்பில் வெளியான படம் ஆதித்ய வர்மா திரைக்கு வந்து ஓடி கொண்டிருக்கிறது.


தெலுங்கில் பிரமாண்ட வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டியின் ரீமேக்கான ”ஆதித்ய வர்மா” ஆகும்.மேலும் நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் அறிமுகமான முதல் படத்திலேயே அவரது நடிப்பை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர்.இந்த படம் ஏற்கனவே ”வர்மா” என்ற தலைப்பில் இயக்குனர் பாலா இயக்கி அதை நிறுத்தி மீண்டும் முதலில் இருந்து படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் நடிகர் விக்ரமிற்கு பாலா இயக்கிய வர்மா படம் பிடித்திருந்தது .ஆனால் அந்த படம் அர்ஜுன் ரெட்டி சாயலில் இல்லை என்பதற்காக மட்டும் மீண்டும் படமாக்கப்பட்டது .இந்நிலையில் ,நடிகர் விக்ரம் தனக்கு பிடித்ததும்,பாலா இயக்கிய வர்மா படத்தை தனியாக ரிலீஸ் செய்யலாம் என திட்டமிட்ருந்தார்.

மேலும் ஆதித்ய வர்மா திரைப்படமும் திரையில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிருப்பதால் இதற்கு நடுவே ‘வர்மா ‘ படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு எந்த படம் பிடித்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கலாம் என விக்ரம் திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.

எனவே பாலாவின் ’வர்மா’ படத்தின் ரிலீஸ் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. துருவ் விக்ரமின்து உண்மையான முதல்படமான ’வர்மா’ படம் எப்படி உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.