பவானி ஆற்றின் நடுத்திட்டில் கோவில்! திடீரென அதிகரித்த வெள்ளம்! சாமிகும்பிட சென்ற 51பேரின் திக்திக் நிமிடங்கள்!

பவானி ஆற்றில் மின் உற்பத்திக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டதால், சைரன் ஒலி எழுப்பிய நிலையில், சைரன் ஒலித்ததை கவனிக்கவிக்காத சுற்றுலா சென்ற 51 சுற்றுலா பயணிகள் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய அவதிக்கு உள்ளாகினர்.பின்னர் 4 மணி நேர போராட்டத்துக்கு பின் காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்டனர்.


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணைக்கு அமைந்துள்ளது . இந்த அணைக்கு அருகில் பிரசித்தி பெற்ற வன பத்ரகாளியம்மன் கோவிலும் உள்ளது .இந்த கோவில் ஆற்றில் நடுத்திட்டில் செடி கொடிகள் வளர்ந்து புதர் போன்று இந்த கோவில் காணப்படும். நேற்று, ஆயுத பூஜை விடுமுறையை யொட்டி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து இருந்தனர்.

இந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்து காணப்பட்டது. மேலும், இந்த அணை நீரை ஆதாரமாக கொண்டு பவானி ஆறு ஓடுகிறது. இந்த ஆறு பாய்ந்தோடி வரும் ஒரு சில இடங்களில் 2 கிளைகளாக பிரிகிறது. வன பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து தேக்கம்பட்டிக்கு செல்லும் வழியில் பம்ப் ஹவுஸ்யும் அமைந்துள்ளது. அந்த பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 51 பேர் நேற்று தேக்கம்பட்டி பம்ப் ஹவுஸ் பகுதிக்கு சுற்றுலா வந்தனர்.

பார்பதற்கு அழகாக இருக்கும் பவானி ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்தது. இதனை கண்ட சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் ஆற்றில் குளித்து சென்றனர். பின்னர் அங்கே சமைத்து பத்ரகாளியம்மனுக்கு படையல் போட்டு வழிபாடும் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், மின் உற்பத்திக்காக நேற்று மாலை திடீரென பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது, இந்த தண்ணிரால் பம்ப் ஹவுஸ் பகுதியில் வழியே செல்லும் பவானி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த திடீர் வெள்ளத்தினால் சுற்றுலா பயணிகள் வெள்ளத்தில் சிக்கி அவதிக்கு உள்ளானர்கள். பின்னர் மேட்டுப்பாளையம் காவல்துறை மற்றும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

பம்ப் ஹவுஸ் பகுதிக்கு விரைந்த காவல்துறை மற்றும், தீயணைப்பு வீரர்கள். பரிசல் ஓட்டிகளை வரவழைத்தனர். இரவு நேரம் என்பதால் டார்ச் லைட் வெளிச்சத்தின் உதவியுடன் லைப்ஜாக்கெட்டுகள் கொண்டு செல்லப்பட்டு ஆற்றின் நடுத்திட்டில் சிக்கிய குழந்தைகள் உள்பட 51 பேர் பரிசலில் மீட்கப்பட்டனர். சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னரே அவர்களை மீட்க முடிந்தது.

வழக்கமாக தேக்கம்பட்டி பம்ப் ஹவுஸ், பவானி ஆற்றங்கரைகளில் பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் போது இந்த சைரன் ஒலிக்கும். உள்ளூரை சேர்ந்தவர்கள் இந்த சைரன் ஒலித்தால் பவானி ஆற்றில் இருந்து கரையேறி விடுவார்கள். ஆனால் வெள்ளத்தில் சிக்கியச் சுற்றுலா பயணிகள் வெளியூரை சேர்ந்தவர்கள் என்பதால் சைரன் ஒலித்ததை அவர்கள் கவனிக்கவில்லை என்பதாலும் வெள்ளத்தில் சிக்கி கொண்டனர்.

இந்த நிகழ்வு அப்பகுதியில் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்த மாதரி வெள்ளத்தில் சுற்றுலா பயணிகள் நுழைவதை தடுக்க பொதுப்பணித்துறை வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.