பள்ளிக்கூட காதல் திருமணத்தில் முடிந்த மகிழ்ச்சி தருணம்! அடுத்த 5 நிமிடத்தில் ஏற்பட்ட பயங்கரம்! நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!

டெக்சாஸில் புதுமணத் தம்பதியினர் கடந்த வெள்ளிக்கிழமை திருமண விழாவைத் தொடர்ந்து சந்தோசத்துடன் வீட்டிற்க்கு திரும்பி கொண்டிருந்தனர்.


யாரும் எதிர்ப்பார்க்காமல் அவர்களது கார் ,பிக்கப் டிரக் மீது மோதி ,டெக்சாஸின் ஒரு நெடுஞ்சாலையில் புது மண தம்பதிகள் - ஹார்லி மோர்கன், 19, மற்றும் ரியானன் பயூட்ரூக்ஸ், 20 இருவரும் சம்பவ இடத்திலேயே மரணித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை பல கனவுகளுடன் துவங்க இருந்த சில நிமிடங்களில்  இந்த கோர விபத்தினை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.

அதிலும் என் குழந்தைகள் இறப்பத்கை நான் என் கண்களால் பார்த்து துடித்துவிட்டேன் என மணமகனின் தாயார் கென்னியா கதறும் காட்சிகள் மனதை உடைப்பதாக உள்ளது.

டிரக்கை ஓட்டி வந்த டிரைவர் எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பித்துகொள்ள, புதிதாக திருமணம் முடித்த இருவரும் வாழ்க்கையை துவங்கும் முன்னத்காக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.