குழந்தைகளுக்கு கனவு வருமா? தூக்கத்தில் ஏன் சிரிக்கின்றன?

திடீர் திடீரென தூக்கத்தில் குழந்தைகள் சிரிப்பதும், திடுக்கிட்டு அழுவதும் உண்டு. இதை நம் முன்னோர்கள், ‘குழந்தைகளுக்கு கடவுள் விளையாட்டு காட்டுகிறார்’ என்பார்கள். குழந்தைகள் கனவு காண்கிறார்கள் என்பதுதான் உண்மை.


* பிறந்து இரண்டு வாரங்கள் முடிந்ததுமே குழந்தைகள் கனவு காணத் தொடங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

* குழந்தை அன்னையின் அணைப்பிலேயே இருக்கும்வரை இனிமையான கனவுகளே காண்கின்றன. அன்னையிடம் இருந்து பிரிக்கப்பட்டவர்கள், தன்னைச் சுற்றி எப்போதும் சண்டை, சத்தம் போன்றவற்றைக் கவனிக்கும் குழந்தைக்கு பயமுறுத்தும் கனவுகள் வருகின்றன.

* 18 மாதங்களுக்குப் பிறகு குழந்தைகளின் கற்பனைத் திறன் வேகமாக வளர்கிறது. அதனால் பல்வேறு பயமுறுத்தும் கனவுகள் வருகின்றன. பள்ளிக்குச் செல்லும் ஆரம்ப காலங்களில் குழந்தைகளுக்கு பயமுறுத்தும் கனவுகள் நிறைய வரும். அதனால்தான் பெரும்பாலான குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்லவே பயப்படும்.

குழந்தைகளுக்கு கனவு வராமல் தடுக்க வழியில்லை. ஆனால் குழந்தை தூங்கத் தொடங்கியதும் அதன் அருகிலேயே இருந்து ஆதரவுடன் தட்டிக் கொடுப்பதால் குழந்தை ஆறுதலான மனநிலை பெறுகின்றன. பயங்கரமான கனவுகளை சமாளிக்கும் திறனைப் பெறுகின்றன.