மாமியார் வீட்டுக்கு போனா..! வெறும் கரிக்கட்டையா கொண்டு வந்தாங்க! கதறும் இளம் பெண் தாயார்!

சென்னை திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கத்தில் தீ விபத்தில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தில் மாமியார்தான் தீ வைத்து எரித்துள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.


திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியை சேர்ந்த ஜாக்லின் என்பவருக்கும் அயனம்பாக்கத்தை சேர்ந்தவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவர் அகால மரணம் அடைந்துவிட தாய் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார் ஜாக்லின்.

புகுந்த வீடு என்ற அடிப்படையில் வாரம் ஒரு முறை மட்டும் வந்து மாமியாரை சந்தித்துவிட்டு நலம் விசாரித்து விட்டு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார் ஜாக்லின். இந்நிலையில் கடந்த வாரம் வழக்கம்போல் வந்த ஜாக்லின் சமையல் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கினார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வந்த ஜாக்லின் சிகிச்சை பலனின்றி 5 நாட்களுக்கு பின்னர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையடுத்து ஜாக்லினின் உறவினர்கள் திருவேற்காடு காவல்நிலையத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தனர். அதில் ஜாக்லின் தீ விபத்தில் உயிரிழந்திருக்க வாய்ப்பு இல்லை எனவும் மாமியார்தான் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே மாமியாரிடம் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.