திரைப்படமாகிறது அய்யா நல்லகண்ணு வாழ்க்கை! இயக்குனர் யார் தெரியுமா?

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு பற்றிய வாழ்க்கை வரலாற்று படம் சினிமாவாக வெளிவர உள்ளது! ஒரு வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கக்கூடிய அத்தனை தகுதியும் உடையவர் நல்லகண்ணு என்பதை நாம் கர்வத்துடனே சொல்லி கொள்ளலாம்!


காரணம்.. அவரது நிழல் கூட ஒழுக்கமானதே!! அரசியல்வாதிகளிலேயே தன் எளிமையால் அனைத்து தரப்பு மக்களாலும் நேசிக்கப்படுபவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மட்டுமே என்பதை கொஞ்சம் உரக்கவே சொல்லலாம். 

எதிரிகளையே இதுவரை சம்பாதிக்காத ஒரே அரசியல் கட்சி தலைவர்தான் இந்த "நவீன கக்கன் நல்லகண்ணு"!  இவரிடம் உள்ள குணங்களில் எதை சொல்ல.. எதை விட?  !போராட்டம்இன்றுவரை 4,000 ரூபாய்க்கு ஒரு சாதாரண வீட்டில் குடியிருக்கும் எளிமையை சொல்வதா? திருநெல்வேலி ஜாதி கலவரத்தில் தனது மாமனார் போராட்டத்தில் கொல்லப்பட்டபோதும், நிதானம் தவறாமல் தக்க முடிவு எடுத்ததை சொல்வதா? 

மாமனார் கொல்லப்பட்டதற்கு, தரப்பட்ட நஷ்ட ஈட்டு பணத்தை அதே போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சார்ந்த குழந்தைகளின் படிப்புக்காக தந்ததை சொல்வதா?  கம்யூனிஸ்ட் பற்றி தவறாக பிரச்சாரம் செய்தவர்களிடம் கம்பை எடுத்து கொண்டு ஓடினாரே, அதை சொல்வதா?

மீசைஅவரது 80-வது பிறந்த நாளுக்கு ஒரு காரும், 1 கோடி ரூபாயும் வசூல் செய்து கட்சி சார்பாக தரப்பட்டபோது, அதை இரண்டையுமே கட்சிக்காக தந்துவிட்டாரே.. அதை சொல்வதா?  7 வருடம் சிறை தண்டனையை அனுபவித்தபோது, தலைகீழாக தொங்கவிட்டு அவரது மீசையை கையாலேயே பிடுங்கி பிடுங்கி எடுத்தார்களே சிறைகாவலர்கள்.. அந்த சித்ரவதையால் இன்றுவரை மீசையே முளைக்காத காரணத்தை சொல்வதா?

இளைய தலைமுறைதன் துணிகளை இன்று வரை தானே துவைத்து கொள்வதை சொல்வதா?  யார் தன்னை சந்திக்க வந்தாலும் இடுப்பில் மடித்து சுருட்டி வைத்திருக்கும் கடலை மிட்டாயை எடுத்து தரும் அன்பை சொல்வதா?  எதை சொல்வது? ஆனால் இன்றைய இளைய தலைமுறைகளுக்கு இது எல்லாவற்றையும் நாம் சொல்லித்தான் ஆக வேண்டும்!அதனால்தான்..அதனால்தான், மென்மை போக்கை மட்டுமே கையாண்டு வரும் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை ஆய்வு செய்து பொன். சண்முகவேலு என்பவர் இயக்கத்தில், ‘அதனால்தான் அவர் நல்லகண்ணு' என்ற பெயரில் ஆவணப்படம் தயாராகி வருகிறது. 

இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா மே 11-ம் தேதி காலை சென்னையில் நடக்கிறது.சமுத்திரகனிஅதுமட்டுமில்லை, இந்த படத்தை இயக்குனர் சமுத்திரக்கனி தயாரிக்கிறார் என்ற கூடுதல் தகவலும் நமக்கு ஆர்வத்தை பலமடங்காக கூட்டி உள்ளது. வர்த்தக சினிமாவில், இப்படி ஒரு படத்தை எடுக்க முன்வந்துள்ள இயக்குனர் சமுத்திரகனியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!அரசியல் அறிவுவந்த 2 மாசத்திலேயே புது கட்சி ஆரம்பித்த தினகரனுக்கும், கமலுக்கும் ஆதரவு அளித்த இந்த தமிழகம், இன்றுவரை ஏனோ நல்லக்கண்ணுவிற்கு அந்த உயரத்தை கொடுக்காமல் இருப்பது அரசியல் பற்றிய அறிவு குறைவாக இருப்பதைதான் வெளிக்காட்டுவதாக உள்ளது. 

அதை விட தொழிலாளர்கள் நிறைந்த கோவையில் நல்லகண்ணு தோற்கடிக்கப்பட்டது அந்த நகருக்கு நீங்காத குறைதான்.கருப்புத் தங்கம்நல்லகண்ணு - ஒரு பத்தரை மாத்து கருப்பு தங்கம்.. அது என்றைக்கும் தன் தரத்தையோ மதிப்பையோ ஒருபோதும் இழக்காது. அவர் வாழும் காலத்திலே அவரை பற்றின வாழ்க்கை வரலாற்றுப் படம் சினிமாவாக வெளிவருவது வரவேற்கத்தக்கது.. போற்றத்தக்கது.. மெச்சத்தக்கது!