இணையதளத்தில் வெளியான அவெஞ்சர்ஸ் என்ட் கேம் திரைப்படத்தின் காட்சிகள்!!

மார்வெல் நிறுவனத்தின் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியான 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்', திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த ஆண்டு அதன் அடுத்த பகுதியான 'அவெஞ்சர்ஸ் என்ட் கேம்' திரைப்படம் வரும் ஏப்ரல் 26ம் தேதி வெளியாக உள்ளது.


இதையடுத்து அவெஞ்சர்ஸ் என்ட் கேம் திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தற்போது அந்த படத்தில் இரண்டு காட்சிகள் வெளியாகியுள்ளன.

அது கேப்டன் அமெரிக்கா கையில் தோர் உடைய ஹம்மர் இருப்பது போலும், கடந்த பகுதியில் தனது சுயரூபத்திற்கு மாறாத ஹல்க் இந்தப்பகுதியில் மாறி அடித்து தும்சம் செய்வது போலவும் பல காட்சிகள் இணையதளத்தில் லீக் ஆகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் மத்தியில் இப்படத்தைப் பற்றி பெரும் வரவேற்பு நிலவி வருகிறது.