அத்திவரதர் தரிசனம் முடிந்தது! வில்லங்கம் தொடங்கியது! 2000 கோடி ரூபாய் சுருட்டியது யார்? பரபரப்பு தகவல்!

அத்தி வரதனை சுத்தி நடந்தது என்ன? 2000 கோடி சுருட்டல்! மாவட்ட நிர்வாகம் இன்று ஒரு தகவல் வெளியிட்டிருக்கிறது.


அத்தி வரதனைக் கானவந்த பக்தர்கள் ஒருகோடியே 1500பேர். அதே சமையத்தில் அறநிலையத்துறை ஒரு செய்தி சொல்கிறது, உண்டியல் வசூல் 7 கோடி! இந்த இரண்டு தகவல்களுமே ஒரு வகையில் ஒப்புதல் வாக்கு மூலம்தான்.ஒரு கோடிபேர் தலா பத்து ரூபாய் போட்டதாக சிரிக்காமல் கணக்குக் காட்டுகிறார்கள்.

காஞ்சியில் ஜுலை முதல் தேதி மட்டுமே கூட்டம் இருந்தது.அதற்குப்பிறகு இரண்டாவது வாரத்தில்தான் கூட்டம் வந்தது என்கிறார்கள்.காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து கோவிலுக்கு போக ஆட்டோவிற்கு 500 ரூபாய்,கொடுத்து வருபவன் பத்து ரூபாய்தான் போடிருப்பானா.ஒபிஎஸ் மூன்று தடவை வந்தார் முப்பது ரூபாய்தான் போடாரா என்றெல்லாம் சிந்திகாதீர்கள்.பக்தர்கள் போகும் பாதையில் எங்குமே உண்டியல்கள் வைக்கபடவே இல்லை.

44 நாட்களில் ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் பேருக்கு மேல் வந்திருக்கிறார்கள்.சிறப்பு தரிசனக் கட்டணம் முதலில் 50 ரூபாயாக இருந்து 500ஆக மாறியது அதுவும் 2000 பேருக்குத்தான் கொடுத்தார்கள். அதை வழக்கம் போல ஒரு கவுண்ட்டர் வைத்துக் கொடுக்காமல் ஆன்- லைனில் விற்றது ஏன்.

காஞ்சிபுத்தில் மொத்தம் 3000 ஹோட்டல் அறைகள் இருக்கின்றன.ஒரு நாளைக்கு 10000 க்கு குறைவாக ஒரு நள்கூட அறை கிடைக்கவில்லை. 40 நாள் ஹோட்டல் வசூல் மட்டும் 150 கோடி!.மூன்றே மூன்று ஜவுளிக் கடைகள் மட்டும் ஆயிரக்கணக்கான இலவச பாஸ்களை கொடுத்து தீர்த்தன.அதில் ஒரு 250 கோடிக்கு குறையாமல் லாபம் பார்த்து விட்டன அந்தக் கடைகள்.அவர்கள் 10000 ரூபாய்க்கு புடவை வாங்கினால இலவச பாஸ் என்று கூவிக்கூவி விற்குமளவுக்கு அவர்களுக்கு பாஸ் கிடைத்தது எப்படி?

ஒரு நாளைக்கு வி.ஐ.பி பாஸ் மூலம் மட்டும் 50000 பேர் தரிசித்தார்கள்.ஒரு வி.ஐ.பி பாஸ் 8000 க்கு விற்கப்பட்டு இருக்கிறது என்றால் ஒரு நாளைக்கு இதில் மட்டும் 4 கோடி ரூபாய். 40 நாட்களுக்கு?

உள்ளே போன பிறகு அத்தி வரதரின் முன்னே நிற்க 30000 ரூபாய் அமர்ந்து தரிசிக்க 50000ஆயிரம் வசூலித்திருக்கிறார்கள்.அதுவும் சில நிமிடங்களுக்கு.இப்படி ஒரு நாளைக்கு 16 மணி நேரம் இரவும் பகலும் வசூலித்திருக்கிறார்கள்.வழியில் எங்கும் உண்டியலே இல்லாததால் பொது மக்களும் வி.ஐ.பிகளும் பட்டரின் தட்டுகளில் அள்ளிப் போட்டதற்கு கணக்கே இல்லை.பலத் நகைகளையும் போட்டிருக்கிறார்கள்

வி.ஐ.பி பாஸ்,வி.வி ஐ பி பாஸ் மூலம் மட்டுமே ஒரு நாளைக்கு 25 கோடி பார்த்திருக்கிறார்கள்.40 நாட்களுக்கு அது மட்டுமே 1000 கோடி ரூபாய்.நாற்பது நாளும் காஞ்சிபுரம் மாவட்ட தாசில்தார்கள் ஃபுல் பிசி.இவர்கள் மட்டுமல்ல கோவிலுக்கு உள்ளே தரிசனத்திற்குப் பிறகு  அத்தி வரதரோடு ஃபோட்டோ எடுத்துக்கொள்ள பத்தாயிரம்,அத்தி வரதருக்கு சாத்தியமாலை 20000 ரூபாய் என்று வசூல் வேட்டை நடந்திருக்கிறது. மிகக் குறைவாக வைத்தாலும் சராசரியாக ஒரு பக்தர் 100 ரூபாயாவது போட்டிருப்பார்.

அது ஒரு 700 கோடி என்று அத்திவரதர் பலபேரை கோடீசுவரர்களாக ஆக்கிவிட்டு குளத்துக்குள்ளே போய்விட்டார்.இப்போதைக்கு ' வெளியில எல்லாம் பாஸ் ஏழாயிரம் , எட்டாயிரம்   அப்படினு விக்கறாங்க நம்ம கிட்ட 5000 ஆயிரம் ரூபாதான்' என்று ஒரு ஆடியோ மட்டும்தான் வெளி வந்திருக்கிறது. இன்னும் பங்கு பிரிக்கத் துவங்கும் போது இப்படி பல ஆடியோக்களும் வீடியோக்களும் வெளிவரலாம் என்று எதிர் பார்க்கப் படுகிறது.