அச்சச்சோ! இப்ப கும்பிடுற அத்திவரதர், இந்துக்களின் பெருமாள் இல்லையா! அது புத்தர் சிலையாம் !

அத்திரவரதர் புகழ் உலகம் முழுவதும் பரவியிருப்பதால், வெளிநாடுகளில் இருந்தும் சிலர் காஞ்சிபுரம் வருகிறார்கள். நம் நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் என்று அத்தனை உயர் பதவி மக்களும் வந்து சேர்கிறார்கள். காஞ்சிபுரத்தில் நாள்தோறும் திருவிழாதான் நடக்கிறது.


இந்த நிலையில், இந்தக் கூட்டத்தைக் கண்டு பொறுக்க முடியாமலோ என்னவோ, இப்போது கும்பிடும் சிலையான அத்திவரதர் சிலை பெருமாளுடையது இல்லை, அது புத்தர் சிலை என்று ஒரு சர்ச்சையை சிலர் கிளப்பியிருக்கிறார்கள்.

அதாவது, மறுமலர்ச்சிக் காலத்தின்போது புத்தருடைய சிலைகளை இரவோடு இரவாக பெயர்த்து எடுத்து நீர் நிலைகளுக்குள் வீசி விடுவது அன்றைய சைவ வைணவ சமய வெறியர்களின் வழக்கம். பெரும்பாலும் புத்தர் சிலைகளை உடைத்தும் சிதைத்தும் வீசி விடுவார்கள். இன்னும் சில துணிகரமான காலகட்டங்களின் புத்தர் சிலைகளுக்கு கரும்புள்ளி செம்புள்ளிக் குத்தி அசிங்கப்படுத்தி அவற்றை பாடையில் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் வீசி வருவார்கள். அதை சாவு ஊர்வலம் போல நடத்துவார்கள்.

இவ்வாறு வீசப்பட்ட சிலைகள் நீர் வற்றும்போது வெளிப்படும். அவற்றை மக்கள் வணங்கத் தொடங்கினார்கள். சில சிதைந்த புத்தர் சிலைகளை நீர் நிலைகளின் கரைகளில் எடுத்து வைத்து சாமி கும்பிட்டார்கள். வற்றாத குளத்தில் இருக்கும் புத்தர் சிலைகள் எப்பொழுதாவது நீர் வற்றுப்போது வெளிப்படும். அப்போது மக்கள் அதிசயமாக பார்த்து வணங்குவார்கள். தினசரி காட்சி தரும் சிலைகளுக்கு மத்தியில் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை 'அத்திப் பூத்தாப்போல' தோன்றுவதால் அவரை 'அத்தி வரதர்' என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். இதுதான் அத்தி வரதரின் வரலாறு.

ஏன் அவருக்கு வரதர் என்று பெயர் வந்தது?

வரதர் அல்ல அவர் பெயர். அவருடைய முழுமையான பெயர் 'வரதராஜர்'. புத்தர் ஒரு இளவரசர். அரசபரம்பரையில் இருந்து வந்தவர். அவர் வட நாட்டு ராஜா. வடக்கில் இருந்து வந்த அரசர் என்ற பொருளிலேயே அவருக்கு வரதராஜர் என்ற பெயர் வந்து சேர்ந்தது. இன்றைய வரதராஜர் கோயிலே ஒரு புத்தர் கோயில்தான். புத்த விகாரத்தில் இருந்த வரதராஜன் சிலையை அதாவது புத்தர் சிலையை தூக்கி குளத்தில் போட்டுவிட்டு அதை இந்து கோயிலாக மாற்றி விட்டார்கள். இதுதான் காஞ்சீபுறம் வரதராஜர் ஆலயத்தின் ஸ்தல வரலாறு.

குளத்தில் குடி இருப்பது சாட்சாத் அந்த புத்தர் பெருமான்தான். இன்றைக்கு அத்தி வரதர் என்கிற பெயரில் பிராமணர்கள் கொண்டாடி வருவதும் புத்தரைதான். தமிழகம் முழுவதிலும் இருந்து அல அலையாக மக்கள் தரிசித்து வருவதும் புத்த பகவானைத்தான் என்கிறார்கள். கேட்க நல்லாத்தான் இருக்கு... உண்மையா என்பதை ஆன்மிகப் புலிகள்தான் சொல்ல வேண்டும்.