ராணுவ வீரரின் தற்கொலை முயற்சி...! பதற வைக்கும் வைரல் வீடியோ!

இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மின்மாற்றியில் இராணுவ வீரர் தற்கொலை முயற்சி செய்துகொண்ட விவகாரம், வைரலாக மாறிவருகிறது. ராணுவ வீரர் ஆபத்தான நிலையில் மருத்துவ சிகிச்சையில் உள்ளார்.


மதுரை மாவட்டம் மேல ஒரத்தனுர் பகுதியை சேர்ந்த சக்தி ராணுவ வீரர் நேற்று அவருடைய மனைவி தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில் கோட்டாட்சியர் விசாரணைக்காக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார், 

ஏற்கெனவே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் இருந்தவருக்கு மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மேலும் தொந்தரவு கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி அங்குள்ள கம்பி பிடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனால் டிரான்ஸ்பார்ம் வெடித்ததில் படுகாயம் அடைந்த ராணுவ வீரர் சக்தி அங்குள்ள பொதுமக்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வீடியோ கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.