பொறியியல் கட்டணத்தை உயர்த்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முடிவுக்கு உயர்கல்வித்துறை தடை விதித்தது என்று வெளியான தகவலுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு
அண்ணா பல்கலை., பொறியியல் படிப்பு கட்டண உயர்வு! எடப்பாடியுடன் மோதும் சூரப்பா!

பொறியியல் கல்லூரிகளின் கட்டணத்தை உயர்த்துவது பற்றி அண்ணா பல்கலைக்கழகம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. கட்டணத்தை உயர்த்தும் திட்டம் பற்றி பல்கலைக்கழக சிண்டிகேட் மற்றும் செனட் உறுப்பினர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. இதுவரை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
கட்டண விகிதம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்றால் முதலில் குழு அமைக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் இதுவரை எவ்வித குழுவையும் அமைக்கவில்லை. பொறியியல் கல்லூரிகளின் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் அதிகாரம் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மட்டுமே உள்ளது.
கட்டணத்தை உயர்த்துவது என்பது பற்றி முடிவெடுத்தால் முறையாக தகவல் தெரிவிக்கப்படும் - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா