ஆக்ரோசம்! கோபம்! வெறி! காண்டாமிருகத்திடம் சிக்கிய காருக்கு நேர்ந்த கதி! உள்ளே இருந்தவர்?

மூனிச்: காண்டாமிருகம் ஒன்று கோபத்தில் காரை புரட்டிப் போடும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


 ஜெர்மனியின் ஹோடன்ஹேகன் பகுதியில் சிரின்கெடி சஃபாரி பார்க் உள்ளது. இங்கு, வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த வனவிலங்கு சரணாலய ஊழியர் ஒருவர், கார் ஒன்றில் பூங்கா உள்ளே, பராமரிப்புப் பணிகளை செய்வதற்காக சென்றுள்ளார்.

அப்போது அவரை வழிமறித்த காண்டாமிருகம், காரை தடுத்ததோடு, அதனை பல முறை தனது கொம்பால் முட்டி முட்டி, புரட்டிப் போட்டது. அதிர்ஷ்டவசமாக, காரில் இருந்த நபருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை, பார்வையாளர் ஒருவர் படம்பிடித்து வீடியோவாக வெளியிட தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.  

தற்போது, 30 வயதாகும் அந்த காண்டாமிருகத்திற்கு , குசினி எனப் பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 18 மாதங்களுக்கு முன்புதான், இந்த வனவிலங்குகள் சரணாலயத்திற்கு, குசினி கொண்டுவரப்பட்டது. அது முதலாகவே, அமைதியாக இருந்தாலும், இத்தகைய செயலில் ஈடுபடுவது இதுதான் முதல்முறை என, அங்குள்ள ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.