ஆசிரியையிடம் தனிமையில் சிக்கிய மாணவனுக்கு நேர்ந்த கதி! வைரல் வீடியோ!

ஆந்திர மாநிலத்தில் பள்ளிக்கு விடுப்பு எடுத்த மாணவனை சரமாரியாகத் தாக்கிய தனியார் பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கல்வியை வியாபாரமாக்கியதன் விளைவுகள் அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. கல்வி வியாபாரிகளும், அவர்களின் கடையில் வேலை பார்க்கும் சேல்ஸ் மேன்களான ஆசிரியர்களும் நடத்தும் அத்துமீறல்களும் கண்டனங்களுக்கு ஆளாகிக் கொண்டுதான் இருக்கின்றன.

மாணவர்களின் மூளைகளில் சரக்கு போல கருத்துக்களை திணிக்கும் முயற்சிகள் விடுப்புகளால் பாதிக்கப்படுவதையும் அதனால் பள்ளிக்கான பெயர் கெடுவதையும், இந்த பணம் தின்னும் கழுகுகள் விரும்புவதில்லை.

அந்த வரிசையில் விசாகப்பட்டினம் அல்லிபுரத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் பயிலும் மாணவன் ஒருவன் பள்ளிக்கு வராமல் நான்கு நாட்கள் விடுப்பு எடுத்ததாகக் கூறப்படுகிறது. நான்கு நாட்கள் கழித்து பள்ளிக்கு வந்த மாணவனை ஆசிரியர் அடித்து துவைத்து எடுத்தார்.

வகுப்பறையில் யாரும் இல்லாதது அந்த ஆசிரியைக்கு வசதியாக போய்விட்டது. இதனால் தடங்கல் இன்றி மாணவனை அந்த ஆசிரியை மிக கோரமாக அடித்து நொறுக்கினார். அதனை ஒருவர் போட்டோ எடுத்து விட, அது தற்போது பெரும் புயலை கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக மாணவனின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து மாணவனை கடுமையாக தாக்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்