தண்டவாளத்தின் குறுக்கே பைக், சிலிண்டர், பட்டாசு! YouTube Viewsக்காக இளைஞன் செய்த விபரீதம்! பிறகு நேர்ந்த தரமான சம்பவம்!

ஐதராபாத்: யூ டியூப் வீடியோ செய்வதற்காக, ரயில் தண்டவாளத்தில் சிலிண்டர், பட்டாசு வைத்த நபர் கைது செய்யப்பட்டார்.


ஆந்திர மாநிலம், சித்துர் மாவட்டத்தில் உள்ள செல்லுர் கிராமத்தைச் சேர்ந்தவர் கொங்காரா ராமிரெட்டி. பிடெக் படித்துள்ள இவர், சில நாட்கள் முன்பாக, தனது வீட்டின் அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில்  வீடியோ ஒன்றை படம்பிடித்து, யூ டியூப்பில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், தனது இருசக்கர வாகனம்,  எரிவாயு சிலிண்டர், காய்கறிகள், பழங்கள், கோழி இறைச்சித் துண்டுகள், பொம்மைகள், பட்டாசு, சைக்கிள் செயின் உள்ளிட்டவற்றை தண்டவாளத்தில் வைக்க, அவை வேகமாக வரும் ரயிலில் நசுங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தனது சுய விளம்பரத்திற்காக, யூ டியுப்பில் வருமானம் ஈட்டுவதற்காகவும்  இப்படி ரயில் பாதையில் ரயில்வே சட்டத்தை மீறி செய்ததாகக் கூறி, அவர் மீது வழக்குப் பதிந்த போலீசார்,  கைது செய்தனர்.