கத்தை கத்தையாக ரூ.44 கோடி! 88 கிலோ தங்கம்! 1200 காரட் வைரம்! ரூ.500 கோடி சொத்து! வாய் பிளக்க வைத்த கல்கி விஜயகுமார்!

ஆந்திர மாநிலத்தின் பிரபல சாமியாரின் வீடு, ஆசிரமம், ஆன்மீகப் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோனையில் கணக்கில் வராத 44 கோடி ரூபாய் ரொக்கம், அமெரிக்க கரன்சி, வைரம், தங்கம் உட்பட்ட 500 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.


ஆந்திர மாநிலத்தில் சித்தூர் அருகே வரதய்யபாளையத்தில் அமைந்துள்ளது பிரபல சாமியார் கல்கியின் ஆசிரமம். இந்த ஆசிரமத்தின் நிறுவனரான விஜயகுமார், பொதுமக்களிடம் தன்னை கல்கி அவதாரம் என்று கூறிகொண்டு ஆசிரமங்கள், ஆன்மிகப் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார்.

ஆந்திரா, இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கல்கி ஆசிரமம், ரியல் எஸ்டேட், கட்டுமானம், விளையாட்டுத்துறைகளிலும் நிருவியுள்ளார். மேலும், விஜயகுமாரின் மகன் கிருஷ்ணாவினால் "வெல்னஸ் குரூப்" என்ற பெயரில் நிர்வாகம் செயல்பட்டு வருகின்றது. இந்த குழுமத்தில் இருந்துதான் வரி ஏய்ப்பு செய்வதாக, வருமான வரித்துறையினருக்கு புகார்கள் எழுந்துள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில், ஆந்திராவில் வரதய்யபாளையம், தெலுங்கானாவில் ஹைதரபாத், கர்நாடகத்தில் பெங்களூர், தமிழ்நாட்டில் சென்னை என கல்கி ஆசிரமம் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 நாட்களாக அதிரடி சோதனை நடத்தி வந்தனர்.

இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்த ஆன்மிகப் பயிற்சியின் மூலம் வருவாய் ஈட்டும் ஆசிரம கிளைகள், தொடர்ச்சியாக வரி ஏய்ப்பு செய்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த அதிரடி சோதனையில் 2014ஆம் ஆண்டு முதல் சுமார் 409 கோடி ரூபாய் அளவுக்கு பணத்தை கணக்கில் காட்டாமல் இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வரி ஏய்ப்பு செய்த பணத்தை முறைகேடாக சொத்துகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது இந்த வருமான வரித்துறை மூலம் தெரிவித்துள்ளது.

இந்த அதிரடியான வருமான வரித்துறை நடத்திய கல்கி விஜயகுமார் மற்றும் அவரது மகன் வீடுகள் மற்றும் ஆசிரம வளாகத்தில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரொக்கம் 43.9 கோடி ரூபாயும், 18 கோடி ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க கரன்சியும், 26 கோடி ரூபாய் மதிப்புள்ள 88 கிலோ தங்க நகைகளும், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள 1271 காரட் வைரம் என 93 கோடி ரூபாய் மதிப்பிலான கணக்கில் காட்டாத பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.

இதுமட்டுமின்றி, விஜயகுமாரும், அவரது மகனும் இந்தியாவிலும், அமெரிக்கா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூரிலும், வரி ஏய்ப்புக்கு வசதியான வெளிநாடுகளிலும் பல நிறுவனங்களில் முதலீடுகள் செய்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. அதில், ஆசிரமத்தில் ஆன்மிகப் பயிற்சிக்கு வந்த வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் மூலம் இந்த நிறுவனங்களுக்கு பணம் கைமாறியுள்ளது.

இவர்கள், இந்தியாவில் வரி செலுத்த வேண்டிய வருமானத்தை மறைத்து, வெளிநாடுகளில் முதலீடு செய்து, பின்னர், வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடம் வெளிநாட்டு கரன்சிகளாகவே பணத்தைப் பெற்று, கறுப்புச் சந்தையில் அந்த பணத்தை மாற்றி முறைகேடாக லாபம் பார்த்து வந்ததுள்ளனர்.

தொடர்ந்து நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனையில் இவை அனைத்தும் தெரிவித்துள்ளது. மேலும், விசாரணைகள் நடைபெறும் என்று வரித்துறை அதிகாரிகள் கூறிகின்றனர்.