காருக்குள் தங்கச் சுரங்கம்..! தோண்டத் தோண்ட நகைகள்! மலைக்க வைத்த மர்ம நபர்!

ஆந்திராவில் காரின் சீட்டுக்கு அடியில் வைத்து 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை கடத்தி வந்த நபர்களை சோதனை பிரிவு போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.


ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியில் உள்ள ஒரு சோதனை சாவடியில் சோதனை பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவந்துள்ளனர். இந்நிலையில் அந்த வழியாக வந்த கார் ஒன்றில் சோதனைச்சாவடியை கடக்கும்போது தனிப்பிரிவு போலீசார் காரை சோதனை செய்தனர்.

அப்போது காரின் சீட்டுக்கு அடியில் தனி பெட்டகம் அமைத்து அதில் சுமார் 3 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை கடத்தி வந்ததை காவல்துறையினர் பிடித்துள்ளனர். இந்நிலையில் அந்த வாகனத்தில் வந்த நபர்களை காவல்துறையினர் விசாரித்தனர் அப்போது அந்த கார் கடப்பா பகுதியில் நகை கடை நடத்தி வரும் பஜ்ரங் சேட் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

இந்த நகை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது நெல்லூரில் இருந்து கொண்டு வந்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர்.இதையடுத்து அந்த நகையின் மதிப்பு சுமார் 6 கிலோ வரை இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நூதன முறையில் காரின் சீட்டுக்கு அடியில் தனி பெட்டகம் போல் அமைத்து அதில் நகைகளை கடத்துவது சினிமா பாணி போல் உள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இந்த மாதிரியாக எத்தனை முறை கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் மற்றும் வரி எய்ப்பு செய்வதற்காக பலர் இந்த மாதிரியான திருட்டு வேலைகளில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது. என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து அவர்களுக்கு பின்னணியில் உள்ள நபர்கள் குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றும் இவர்களுக்கு நகைகளை கொடுத்தது யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.