கோவிலுக்குள் நடுஜாம பூஜை! நரபலி! ஒரு ஆண்! 2 பெண்கள் பலியிடப்பட்ட பகீர் சம்பவம்!

ஆந்திர மாநிலத்தில் கோவிலுக்கு ஒரு ஆண் 2 பெண்கள் என மூன்று பேரின் சடலங்கள் கிடந்த நிலையில் சிவலிங்கத்தின் மீது ரத்தம் தெளிக்கப்பட்டிருந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


அனந்தபூர் மாவட்டம்  தனகல் கிராமத்தைச் சேர்ந்த ஷிவ்ராமி ரெட்டி, அவரது சகோதரி கமலம்மா, மற்றும் சத்தியலட்சுமி என்ற மற்றொரு பெண் ஆகியோர்  கழுத்து அறுக்கபப்ட்ட நிலையில் கோவிலில் சடலமாகக்  கிடந்தனர். மேலும் சிவலிங்கத்தின் மீதும் ரத்தம் தெளிக்கப்பட்டிருந்தது. காலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் சடலன்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

தகவல் அறிந்து வந்த போலீசார், சிவலிங்கத்தின் மீதும் ரத்தம் தெளிக்கப்பட்டிருந்ததைக் கண்டு இது மந்திர மாயமாகவோ, சூனியக் கார நடைமுறையின் ஒரு பகுதியாகவோ இருக்கக் கூடுமா என சந்தேகம் எழுப்பினர். 

மேலும் மூவரையும் எவரேனும் கொலை செய்து விட்டு காவல் துறையினரை திசை திருப்புவதற்காக மந்திர மாய நடைமுறை போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்றும் சந்தேகிக்கும் போலீசார், கொலை வழக்காக பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.