பன்னீர் மகனுக்கு மந்திரி பதவி குடுக்காதீங்க! டெல்லிக்கு ஆர்டர் போடும் அன்புமணி!

நரேந்திரமோடியை பிரதமராக தேர்வு செய்த கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் கலந்துகொண்டனர். எடப்பாடிக்கு பிரதமரை முன்மொழியும் அற்புதமான வாய்ப்பு கிடைத்தது. அதேநேரம் பிரதமரை தனியே சந்தித்துப் பேசியவர் ஓ.பி.எஸ். மட்டும்தான்.


தமிழகத்தில் இருந்து வெற்றிபெற்ற ஒரே எம்.பி. என்பதால், ரவீந்திரநாத்துக்கு டெல்லியில் பயங்கரமான வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக அமித் ஷாவும், நரேந்திர மோடியும் ரவீந்திரநாத்திடம் அன்பாகப் பேசியிருக்கிறார்கள். இந்த விவகாரத்தைப் பார்த்து டென்ஷன் ஆகியிருக்கிறார் அன்புமணி.

கடந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றபோதும் அன்புமணிக்கு மந்திரி பதவி கொடுக்கப்படவில்லை. ஆனால், இப்போது ரவீந்திரநாத்துக்கு மந்திரி பதவி உறுதி என்று பேசப்படுவதைக் கண்டு கோபம் அடைந்திருக்கிறார் அன்புமணி.

நான் ஜூலை மாதம் ராஜ்யசபா எம்.பி.யாகிவிடுவேன். அதனால் எனக்கு இப்போதே மந்திரி பதவிகொடுங்கள் என்று அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்தாராம். ஆனால், அதற்கு இசைவான பதில் வரவில்லை என்றதும் அடுத்தபடியாக, எனக்கு இல்லை என்றாலும் பரவாயில்லை, ரவீந்திரநாத்துக்குக் கொடுக்க வேண்டாம். பின்னர் என்னால் தமிழகத்தில் தலைகாட்ட முடியாது என்று சொன்னாராம்.

அமித் ஷா சிரித்துக்கொண்டாராம். அதற்கு அர்த்தம் ரவீந்திரநாத்துக்குப் பதவி நிச்சயம் என்பதுதானாம்.