அமித்ஷா அடுத்த அதிரடி இந்தி..! உஷார் தமிழா!

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 14ம் நாள் இந்தி மொழி நாள் கொண்டாடப்படுகிறது.


இந்தியை பரப்பும் வகையில் இந்திய மத்திய அரசு மேற்கொள்ளும் திட்டங்களில் இந்தி நாளும் ஒன்று. 1975ம் ஆண்டு முதல் இந்த கொண்டாட்டம் நடந்து வருகிறது.

இந்தி பேசாத பிற மொழியினரின் எதிர்ப்பையும் மீறி, இந்திய அரசு இந்தியை அலுவல் மொழியாக, 1949ம் ஆண்டு இதே செப்டம்பர் 14 அன்றுதான் ஏற்றது. இந்தி பேசாத மக்களிடையே இந்தியை பரப்புவதற்கு தொடங்கப்பட்ட ஆட்சி மொழித் துறை என்ற பிரிவு இவ்விழாவினை நடத்துகிறது. 

இந்தி மொழி கொண்டாட்டத்தில்தான் திருவாய் மலர்ந்திருக்கிறார் அமித்ஷா.

அதாவது நாடு முழுவதும் ஒரே மொழி இருக்க வேண்டுமாம், அப்போதுதான் உலக அளவில் இந்தியாவுக்கு மதிப்பு உயரும் என்று தெரிவித்திருக்கிறார். அதனால் இந்தியா முழுவதும் இந்தி மொழியை வளர்க்க வேண்டும் என்று அறிவிப்பு செய்திருக்கிறார் அமித் ஷா.

இப்படி ஏடாகூடமாகப் பேசினால்தான், நாட்டின் பொருளாதார விவகாரத்தை மக்கள் மறந்து போவார்கள் என்று நினைக்கிறாரோ.

அதனால் கடுமையான எதிர்ப்புகள் தமிழகத்தில் இருந்து கிளம்பியிருக்கிறது. வழக்கம்போல் பல்டி அடிப்பார்களா என்பதைப் பார்க்கலாம்.