மத்திய அமைச்சராகிறார் அமித்ஷா! கேபினட்டில் மோடிக்கு அடுத்த இடம்! என்ன இலாகா தெரியுமா?

பாஜக தலைவர் அமித் ஷா மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவது உறுதியாகி உள்ளது.


நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் இருந்து சுமார் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் அமைச்சர். கடந்த 5 ஆண்டுகளாக இவர் பாஜக தலைவராக இருந்து வருகிறார். மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் வருவதற்கு முக்கியக் காரணங்களில் அமித் ஷாவும் ஒருவர்.

மாநிலங்களுக்கு ஏற்றவாறு கூட்டணி வியூகம் தேர்தல் வியூகத்தை வகுத்து பாஜக தனிப்பெரும்பான்மை பெற வைத்தவர் அமித்ஷா என்று பாஜகவினர் புகழ்ந்து வருகின்றனர். அவரது உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் மத்திய அமைச்சரவையில் அமித்ஷாவிற்கு இடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் அமைச்சா் மத்திய உள்துறை அமைச்சர் ஆவது உறுதி என்று பேச்சு அடிபடுகிறது. தற்போது உள்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்நாத் சிங் பாதுகாப்புத்துறை அமைச்சராக மாற்றப் படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருந்தபோது அங்கு உள்துறை அமைச்சராக இருந்தவர் அமித்ஷா.

மேலும் மத்திய அமைச்சரவையில் உள்ள அமைச்சர் விழாக்களில் மிகவும் அதிகாரம் வாய்ந்தது மற்றும் முக்கியத்துவமானது உள்துறை அமைச்சகம். எனவே அங்கு தனக்கு நம்பிக்கைக்குரிய ஒருவரை நியமிக்க வேண்டும் என்று அமைச்சரவை உள்துறை அமைச்சராக மோடி முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.