அந்த குழந்தை உனக்கு பிறக்கவில்லை..! பிரசவித்து 6 மாதத்திற்கு பிறகு பறிக்கப்பட்ட குழந்தை! கதறும் இளம் தாய்!

செயற்கை கருவூட்டல் முறையில் உருவான ஒரு குழந்தை மற்றொரு பெண்ணுக்கு பிறந்துள்ளதை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சை சேர்ந்த தம்பதி ஒருவர் செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுத்துள்ளனர்.  ஆனால் அந்த பெண்ணின் கருப்பையில் வைக்கப்பட்ட கரு வளர்ச்சி அடையவில்லை. இந்நிலையில் அந்த பெண்ணிடம் மருத்துவமனை நிர்வாகம் தொடர்பு கொண்டு அவருடைய கரு நியூயார்க்கில் வசிக்கும் கொரியாவை சேர்ந்த பெண்ணுக்கு குழந்தையாக பிறந்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் இதை உறுதிப்படுத்த டி.என்.ஏ. டெஸ்ட் எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். அந்த பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் குழந்தைகள் வெள்ளையின அடையாளம் உள்ளதாகவும் சொன்னதை கேட்டு தம்பதி அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைந்தனர். 

இதையடுத்த கொரிய பெண்ணுக்கு பிறந்த குழந்தை தன்னுடையது என்றும் திருப்பித் தரவேண்டும் என்றும் கேட்டதற்கு அந்த கொரிய பெண் மறுத்துவிட்டார். 6 மாதம் பாலூட்டி வளர்த்த குழந்தையை தரமுடியாத என கூறவே நீதிமன்றத்தின் படியேறினார் அமெரிக்க பெண். 

கடைசியில் டிஎன்ஏ முடிவில் அந்த குழந்தை அமெரிக்க பெண்ணுடையது என்பது நிரூபணம் ஆனது. ஆனாலும் பெற்ற தாயிடம் இருந்து குழந்தையை உடனே பிரிக்க முடியாது என்பதால் கொரிய பெண்ணுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் உண்மையான பெற்றோர் குழந்தையிடமும் பல நாட்கள் பழகி பின்னர் பெற்றுக்கொண்டனர்.

அது மட்டும் இல்லாமல் அந்த கொரிய பெண்ணுக்கு பிறந்த மற்றொரு குழந்தையும் வேறு ஒருவரின் கருவில் பிறந்தது தெரியவர அந்த கொரிய பெண் அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையே அமெரிக்க பெண் மருத்துவமனையின் அலட்சியத்தால் மன உளைச்சல் என வழக்குத் தொடர அவருக்கு இழப்பீடு தருவதாக ஒப்புக்கொண்டது.