பிரபல நடிகரின் மகளை கழட்டிவிட்ட காதலன்! சோகத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட புகைப்படம்!

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகள் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் மற்றும் வாசகம் அவர் இசை அமைப்பாளருடனான காதலை முறித்துக் கொண்டாரா என்று ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது.


1973ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் அமிர்கான் இன்றும் பாலிவுட்டில் ஒரு முன்னணி நடிகர். இவரது முதல் மனைவி ரீனா தத்தாவுக்கு பிறந்த பெண் குழந்தை ஐரா.  

அமிர்கானின் மகள் ஐரா கான் இசை அமைப்பாளர் மிஷால் கிரிபளானியை காதலித்து வருகிறார். அவர்கள் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை தன் பக்கமே வைத்துள்ளார் ஐரா கான்

தற்போது ஐரா வெளியிட்ட போட்டோ ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐரா தனது காதலரான மிஷாலுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவில் மிஷால் பின்னால் இருந்தபடி, ஐராவை இறுக்கி அணைத்து கொண்டிருக்கிறார்.

அந்த போட்டோவின் கீழ் “எல்லாம் சரியாகிவிடும்” என்று ஐரா, கேப்ஷன் கொடுத்துள்ளதால் மிஷாலுடனான காதலை முறித்துக் கொள்கிறாரோ என்ற ஐயம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தற்போது அவர் போட்டிருக்கும் ஹேஷ்டேக்குகள் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்தாலும் மிஷால் - ஐரா காதல் முறிந்து இருக்கலாம் என கருத்து நிலவி வருகிறது. முன்னதாக, ஐராவின் பிறந்த நாளில், மிஷால் தனது பதிவில், "பிறந்தநாள் வாழ்த்துக்கள் பேபி. நீங்கள் எளிமையானவர். இந்த பிறந்தநாள் பதிவில் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்” என தெரிவித்து இருந்தார்.