"A" அடல்ட் ஒன்லி படத்தில் முக்கிய வேடத்தில் பிரபல டிவி தொகுப்பாளினி! ரசிகர்கள் உற்சாகம்!

அமலாபால் நடித்துள்ள ஆடை திரைப்படத்தில் பிரபல டிவி நடிகை ஒருவர் இணைந்துள்ளார்.


மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் ரத்னகுமார். இவர் தற்போது நடிகை அமலாபால் நடித்துள்ள ஆடை என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். என்ன கதை என்று யூகிக்க முடியாத அளவுக்கு இந்த திரைப்படம் உள்ளதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த படத்தின் முதல்பார்வை போஸ்டர் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியாகி பலத்த வரவேற்ப்பை பெற்றது. இந்த நிலையில் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

இதற்கு காரணம் இந்தப் படத்தின் டீசரில் அமலா பால் ஆடை இல்லாமல் ஒரு காட்சியில் நடித்து இருப்பதே ஆகும். நிர்வாண காட்சியில் மிகவும் துணிச்சலுடன் நடித்த அமலா பாலுக்கு ரசிகர்களும் திரையுலகப் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தப் படத்தில் அமலா பாலின் கதாபாத்திரப் பெயர் காமினி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆடை படத்தில் வி.ஜே. ரம்யா சுப்பிரமணியன் நடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை தனது ட்விட்டர் பக்கத்தில் ரம்யா சுப்பிரமணியன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். டாப்சி நடித்திருந்த கேம் ஓவர் என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் ரம்யா நடித்திருந்தார்.

இதே போன்று தற்போது ஆடை திரைப்படத்திலும் அவருக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவரது கதாபாத்திரம் பெயர் ஜெனிபர் என்று கூறப்பட்டுள்ளது. ஆடை திரைப்படம் ஏ சர்டிபிகேட் திரைப்படம் என்பதால் அடல்ட் ஒன்லி படத்தில் கூட நீங்கள் நடிப்பீர்களா என்று ரம்யாவை ரசிகர்கள் சீண்டி வருகின்றனர்.