கனடா. பிரான்ஸ். ஜெர்மனி. ஜப்பான்.இத்தாலி. ஐரோப்பிய ஒன்றியம். பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய முன்னேறிய நாடுகள் என்று கருதப்படும், வளர்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட ஜி 7 நாடுகளின் 45 வது உச்சி மாநாடு ஆகஸ்ட் 24ந் தேதி முதல் 26 வரை பிரான்சின் பியாரிட்ஸ் நகரில்,
கட்டுக்கடங்காத காட்டுத் தீ! அமேசானை காப்பாற்ற களம் இறங்கும் 7 நாடுகள்!
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க் தலைமையில் நடைபெற்று வருகிறது. பாலின வேறுபாடுகளை களைந்து சமத்துவத்தை ஊக்குவித்தல், உயர்தர சுகாதார சேவைகள், சுற்றுச்சூழல் மாற்றம் மூலம் பூமியை பாதுகாத்தல்.ஈரானுக்கெதிரான பொருளாதாரத் தடை, பெருங்கடல்களைப் பாதுகாத்தல்.
ஜி7 நாடுகளிடையே சமமான வர்த்தகம், வரி மற்றும் மேம்பாட்டுக் கொள்கைகள் மூலம் உலகமயமாக்கலின் சமூக பரிமாணத்தை பாதுகாத்தல். சீனாவுடனான வர்த்தகப் போர். அங்கம் வகிக்கும் நாடுகளில் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது.
அமேசான் காட்டில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க உதவி செய்வது.டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊக்குவிப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய வாய்ப்புகளை வளர்ப்பது போன்ற முக்கிய அம்சங்களைப் பற்றி இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த நாடுகளின் அமைப்பானது. 1975ம் ஆண்டு உலக பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளை களையும் முயற்சியாக. தங்களின் திட்டங்களை பரிமாற்றிக் கொள்வதற்காக எட்டு நாடுகள் கூடி உருவாக்கி கொண்டது.
1998இல் உறுப்பினராக இணைந்திருந்த ரஷ்யா. உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவை தன்னுடன் 2014இல் இணைத்துக் கொண்டதால், இந்த அமைப்பில் இருந்து நீக்கப்பட்டது. அதன்பின் ஜி8 ஒன்றியம் மீண்டும் ஜி7 என ஆனது.
சுதந்திரம், மனித உரிமை, ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு, செழிப்பு மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற முக்கிய கொள்கைகளோடு, தங்கள் சமூகம் இருப்பதாக இந்த நாடுகள் தங்களை கருதிக் கொள்கின்றன.
ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவின் எந்த நாடுகளும் இந்த ஜி7-ல் இடம் பெறவில்லை. மேலும் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாக காட்டிக் கொள்ளும் இந்தியா, மற்றும் பிரேசில் போன்ற நாடுகள், ஜி20-ல் இடம் பெற்றிருந்தாலும், ஜி7-ன் உறுப்பினர்களாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மணியன் கலியமூர்த்தி