40 லட்சம் பேருக்கு வேலை கொடுத்தவர்! அலிபாபா தலைவர் ஜாக் மா ஓய்வு! அடுத்து என்ன செய்யப்போகிறார் தெரியுமா?

உலகின் நம்பர் ஒன் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா ஓய்வு பெறுகிறார்.


அலிபாபா நிறுவனம் உலகின் நம்பர் ஒன் ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் 11/11 விற்பனை மிகவும் பிரசித்தி பெற்றது. சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் உலகெங்கும் தனது வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கிறது.

சீன பங்குச்சந்தையில் அதிக மதிப்புடைய பங்குகள் இந்த நிறுவனத்தின் பங்குகள் தான். அதுமட்டுமின்றி இந்திய பங்குச் சந்தையிலும் காலூன்ற இந்நிறுவனம் முயற்சிகள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது ‌

அப்படி இணைய உலகையே தனது ஆளுமையில் வைத்திருந்த இந்நிறுவனத்தின் தலைவராக ஜாக் மா தனது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் . இவர் உலகம் முழுவதும் சுமார் 40 லட்சம் பேருக்கு நேரடியாக வேலை கொடுத்தவர். மறைமுகமாக என்றால் கோடிகளை தொடும்.

1999 ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் தற்போதைய சொத்து மதிப்பு 460 பில்லியன் அமெரிக்க டாலராகும். அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 33 லட்சத்து 6 ஆயிரம் கோடியாகும். அதாவது இந்திய ரிசர்வ் வங்கியின் உபரி வருமானத்தைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமாகும். இந்தியாவின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பே 10 லட்சம் கோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் தனது கல்வி மற்றும் விவசாய பணிகளில் அதிக நேரம் செலவிட இருப்பதாக இந்த ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கிறது அந்த நிறுவனத்தின் அறிக்கை. தான் ஓய்வு பெற்று விட்டாலும்

நிர்வாக இயக்குநர்கள் குழுவிலிருந்து தனித்தனியாக இருக்கும் 38 நபர்களைக் கொண்ட ஒரு பெரு நிறுவன நிர்வாகக் குழுவில் ஒரு உறுப்பினராக செயல்பட உள்ளார்.

நடுநிலை பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் கடுமையாக பல தடைகளை தாண்டி இப்போது நாடே பெருமை கொள்ளும் அளவிற்கு வளர்ந்துள்ளார் என புகழாரம் சூட்டுகிறது சீன அரசின் சிசிடிவி தொலைக்காட்சி நிறுவனம்.

சீனாவின் பணக்காரர் என பெயர் பெற்ற இவரின் தன்னம்பிக்கை வரிகள் நாட்டின் பல கல்லூரிகளில் பாடமாக பயிற்றுவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரின் பேச்சுக்கள் தனித்திறமைகளை வளர்க்க இக்கால இளைஞர்களுக்கு தூண்டுகோளாக இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அலி எக்ஸ்பிரஸ். அலிபாபா.சீனா யாகூ.காம். சில்லறை வர்த்தகம். தொலைக்காட்சி. சினிமா போன்ற பல துறைகளில் கொடிகட்டிப் பறக்கும் சீன நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மணியன் கலியமூர்த்தி