மீண்டும் சுடிதாரில் சசிகலா...! யார் வெளியிட்ட புகைப்படம் தெரியுமா..?

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு வருடம் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். ஏற்கெனவே அவர் ஷாப்பிங் சென்றது போன்று சிசிடிவி புட்டேஜ் வெளியானது.


இந்த நிலையில் சசிகலா சுடிதாரில் இருக்கும் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அவர் சிறை வளாகத்தில் நின்று போஸ் கொடுப்பதைப் பார்க்கும்போது, அவர் சிறையில் ஜாலியாக இருப்பது போன்று தெரிகிறது.  

இந்தப் புகைப்படம் பழைய சர்ச்சையின் போது எடுக்கப்பட்டதா அல்லது சமீபத்தில் எடுக்கப்பட்டதா என்ற விளக்கம் கிடைக்கவில்லை. அதேநேரம், யார் இதுபோன்ற புகைப்படங்களைப் பரப்புவது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சசிகலா விரைவில் தண்டனை காலம் முடிந்து வெளியே வரப்போகிறார் என்று செய்தி வந்ததில் இருந்தே சசிகலா குறித்த சர்ச்சைகளும் அதிகம் வருகின்றன. அதனால், சசியின் வருகையை விரும்பாத எடப்பாடி அரசுதான் உளவுத் துறை மூலம் இதுபோன்ற படங்களை வெளியிட்டு, சசி விடுதலையை தடுக்கிறது என்று அ.ம.மு.க. எடப்பாடி மீது பழியைப் போடுகிறது.

அதே நேரம், சசிகலா வெளியே வந்தால் அ.ம.மு.க..வை நடத்தமுடியாது என்பதால் தினகரனே அதுபோன்ற படங்களை வெளியிட்டு இருக்கலாம் என்று அ.தி.மு.க. குற்றம் சாட்டுகிறது.

ஆக, எப்படியோ இவர்கள் இருவரில் ஒருவர் என்பது உறுதியாகத் தெரியவருகிறது.