மீண்டும் கடுமையாக உயரப்போகிறதா விலைவாசி..? ராய்டர்ஸ் நிறுவனம் அதிர்ச்சி தகவல்

இந்தியாவின் விலை வாசி நுகர்வோர் பணவீக்கக் குறியீடு பற்றி, ராய்டர்ஸ் (Reuters) நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், இந்தியாவின் விலை வாசி பற்றிய ஒரு திடுக்கிடும் செய்தியை வெளியிட்டுள்ளது.


கடந்த ஜனவரி மாதத்தில் நுகர்வோர் பணவீக்கக் குறியீடு 1.97 சதவிகிதமாக இருந்தபோது வெங்காயத்தின் விலை. கிலோவுக்கு 250 முதல் 300 ரூபாய் வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வரும் 2020 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் விலைவாசி குறியீடு 7.40 % வரை‌ உயர வாய்ப்புகள் உள்ளதாக எச்சரிக்கை செய்துள்ளது அந்த குழு.

இந்த விலைவாசி உயர்வு அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ள ஆர்பிஐ, ரெப்போ வட்டி விகிதங்களை குறைக்க முடியாது என மறுத்துள்ளது. இந்த நிலையில் சாமானிய மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருள் ஆகியவற்றின் விலை ஆகஸ்ட் மாதம் முதல் ஜனவரி வரை சுமார் 10 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தேசிய நிதி ஆணையம்.

சில்லரை விலை பண வீக்கம் கடந்த மாதம் 5.76 சதவீதமாக உயர்ந்ததன் காரணமாக,காய்கறிகள் விலை கடுமையாக ஏற்றம் கண்டுள்ளது. பருப்புகள் விலை.முட்டை விலை மற்றும் சமையல் எண்ணெய் விலைகள் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பிறகு மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை சுமார் 150 சதவிகித உயர்வை எட்டியுள்ள நிலையில். மீண்டுமொரு விலைவாசி உயர்வை எதிர்நோக்கி காத்திருக்கிறது இந்திய தேசம்.