புது மனைவி வந்த பிறகும் பழைய காதலியுடன் சல்லாபம்! தலித் இளைஞன் கொலைக்கு காரணம் தகாத உறவு! அதிர்ச்சி தகவல்!

சென்னை அருகே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த முரளி காதல் திருமணம் செய்து கொண்டதால் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அது கள்ளக்காதல் கொலை என தெரியவந்துள்ளது.


சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் காரப்பாக்கம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள தனியார் நிறுவனத்தில் முரளி என்ற இளைஞர் பணியாற்றி வந்தார். இவருடைய வயது 28. தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த இவர், கௌசல்யா என்ற பிற்படுத்தப்பட்ட சமுதாய பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். 

திருமணமாகி 2 மாதங்கள் ஆன நிலையில் முரளி தனது அலுவலகத்திற்கு பணிக்கு சென்றுள்ளார். அங்கு டீ பிரேக்கில் எதிரே உள்ள கடையில் டீ அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் முரளியுடன் பேசிக் கொண்டிருந்தார். பிறகு முரளியை அந்த நபர் அழைத்துச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் திடீரென அங்கிருந்து அலறல் சப்தம் வரவே அனைவரும் ஓடிச் சென்று பார்த்தனர். அப்போது முரளி கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். மர்ம நபர் தான் வந்த பைக்கில் தப்பி ஓடிவிட்டார்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த முரளியை, கவுசல்யா சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆணவக் கொலை செய்துவிட்டதாக தகவல்கள் பரவின. ஆனால் விசாரணையின் போது தான் உண்மை தெரியவந்தது. முரளி திருமணத்திற்கு முன்னதாக ஒரு பெண்ணை காதலித்ததும் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றதும் தெரியவந்துள்ளது.

ஆனால் திருமணத்திற்கு பிறகும் அந்த பெண்ணுடன் முரளி தகாத உறவை தொடர்ந்துள்ளார். இதனால் அந்த பெண்ணின் கணவர் தான் முரளியை கொலை செய்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.