ஒரே நேரத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள்! பிறந்த மறுநிமிடமே தாயின் மார்பில் செய்த செயல்! நெகிழ்ச்சி சம்பவம்!

அமெரிக்காவில் ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த இரண்டு பெண் குழந்தைகள் தனது தாயின் மார்பில் படுக்க வைக்கப்பட்ட போது இரு குழந்தைகளும் ஒருவர் ஒருவர் தங்களது கைகளை பற்றிக் கொள்ளும் ஒரு வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது


அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவைச் சேர்ந்த சீலி என்ற பெண்ணிற்கு அறுவைச்சிகிச்சை மூலம் ஒரே நேரத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தை பிறந்தவுடனேயே தன் தாயிடம் காட்ட அவரது மார்பில் படுக்க வைத்த போது இரண்டு குழந்தைகளும் தங்களது கைகளை ஒன்றோடொன்று இணைக்கும் காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் அதை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் குழந்தைகளிடம் இருக்கும் பாசப்பிணைப்பு தற்போது தெரியவருகிறது என தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் இப்படி ஒரு பிணைப்பை பிறந்த குழந்தைகளிடம் நாங்கள் இதுவரை பார்த்தது இல்லை என கூறுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

முதலில் பிறந்த குழந்தை தனது தங்கையின் கையை பிடிக்கும் போது மற்றொரு குழந்தை விரலை பிடிக்க ஏதுவாக தனது கையை நீட்டி தனது அக்காவிடம் கொடுக்கிறது. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அனைவராலும் பார்க்கப்பட்டும் பகிரப்பட்டு வருகிறது.